எல்லாச் சீட்டும் ஜோக்கரா இருந்தால் இப்படித்தான்… தெலுங்கானா எம்.ஏ.வி-ன் அட்ராசிட்டி..!?

 

எல்லாச் சீட்டும் ஜோக்கரா இருந்தால் இப்படித்தான்… தெலுங்கானா எம்.ஏ.வி-ன் அட்ராசிட்டி..!?

ராஜான்னு  பேர் இருந்தாலே பஞ்சாயத்துக்கு  பஞ்சமே இருக்காது என்பதற்கு இந்த ராஜா சிங்கும் உதாரணம்.தெலுங்கா னா மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு பா.ஜ.க எம்.எல்.ஏ.எல்லோரும் போர்வையை போர்த்திக்கொண்டு தூங்குவார்கள் என்றால் இவர் எப்போதும் பிரச்சினையைப் போர்த்திக்கொண்டுதான் தூங்குவார் என்கிற அளவுக்கு அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்வார்.

ராஜான்னு  பேர் இருந்தாலே பஞ்சாயத்துக்கு  பஞ்சமே இருக்காது என்பதற்கு இந்த ராஜா சிங்கும் உதாரணம்.தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு பா.ஜ.க எம்.எல்.ஏ.எல்லோரும் போர்வையை போர்த்திக்கொண்டு தூங்குவார்கள் என்றால் இவர் எப்போதும் பிரச்சினையைப் போர்த்திக்கொண்டுதான் தூங்குவார் என்கிற அளவுக்கு அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்வார்.இந்த முறை அவர் சிக்கியிருப்பது சிலை வைப்பது தொடர்பாக எழுந்த பஞ்சாயத்து ! அங்கேயும் சிலைதானா என்று நீங்கள் நக்கலாக சிரிப்பது தெரிகிறது…இது வேற லெவல்!

raja singh

கடந்த புதன் கிழமை நள்ளிரவில் தனது ஆதரவாளர்களோடு,ஹைதராபாத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனையான ராணி ‘அவந்தி பாய்’ சிலைக்கு அருகில் வந்திருக்கிறார்.ஆளே இல்லாத அர்த்த ராத்திரியில்,அந்த சிலையை எடுத்துவிட்டு புது சிலையை வைக்கப்போவதாக தனது ஆதரவாளர்கள் மத்தியில் முழக்கமிட்டிருக்கிறார்.இந்த தகவலை யாரோ போலிஸுக்கு போட்டுக்கொடுக்க உடனடியாக பொலிஸ் அந்த இடத்துக்கு வந்திருக்கிறது.சிலை வைப்பதற்கு உங்ககிட்ட பர்மிஷன் இருக்கா என்று கேட்டிருக்கிறார்கள்.எங்களையே கேள்வி கேப்பியா என்று ஒரு தொண்டர் எகிற கைகலப்பாக்கியிருக்கிறது.

raja singh

பொலிஸார் தன்னைத் தாக்கியதாக தலையில் அடிபட்டு ரத்தம் சொட்டச்சொட்ட மருத்துவமனையில் தானாகவே போய் அட்மிட் ஆகியிருக்கிறார்.எம்.எல்.ஏ என்பதால் மருத்துவமனையிலும் பெரிதாக கேள்வி கேட்கவில்லை என்று தெரிகிறது.இந்த தகவல் தெரிந்து,ராஜா சிங்கை பூங்கா தெலுங்கானா பாஜக தலைவர் லக்ஷ்மன் நிவாகிகளுடன் சென்று நலம் விசாரித்திருக்கிறார்.

raja singh

அப்போது ராஜா சிங் என்ன நடந்தது என்பதை அவரிடம் சொல்லியிருக்கிறார்.அவர் சொன்ன வெர்ஷன் இது – ‘நாங்கள் சிலை முன் நின்று கொண்டிருக்கும் போது போலீஸ்காரர்கள் லத்தியுடன் வந்தனர்.அவர்களைப் பார்த்ததும் நாங்கள் பாதுகாப்புக்காக  கற்களை கையில் எடுத்தோம். கேள்வியே கேட்காமல் காவலர்கள் எங்களைப்  பலமாகத் தாக்கினார்கள்.எங்களை இப்படித் தாக்குவதற்கு பதிலாக  கொன்றுவிட்டால் நல்லது என்று நான் சொன்னேன்.அதுக்கப்புறம் போலீஸார் அடிப்பதை நிறுத்தினார்கள்.நாங்கள் கையில் வைத்திருந்த 
கற்களைக் காவலர்களிடம் கொடுத்துவிட்டோம்’ என்று சொல்லிக் கதறி  கண்ணீர் விட்டிருக்கிறார்.

இந்த தகவல் மாநிலம் முழுக்க பரவியதும் எங்க சங்கத்து ஆளை எப்படி அடிக்கபோகலாம் என்று தெலங்கானா பா.ஜ.க-வினர் காவலர்களைக் கடுமையான விமர்சிக்கத்தொடங்கினார்கள்.இந்த நிலையில் ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அஞ்சனி குமார் தன் ட்விட்டரில், 16 விநாடிகள் ஓடும் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

raja singh

அந்த வீடியோ பா.ஜ.க  தலைவர் ,தொண்டர்கள் தாண்டி தெலுங்கானா மக்கள் அத்தனை பேரையும்  அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது! அப்படியென்ன அந்த வீடியோவில் இருந்தது என்று கேட்கிறீர்களா? பா.ஜ.க-வினரைக் போலீஸார் தடுக்க முயல்கிறார்கள்.அப்போது ராஜா சிங், தன் கையில் வைத்திருந்த கல்லால் தன் தலையில் தானே அடித்துக்கொள்கிற காட்சிதான் அது! 

இது குறித்துப் பேசிய  காவல்துறை துணை ஆணையாளர் ஸ்ரீனிவாசன் ரெட்டி, ‘காவலர்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது.ராஜா சிங் தன்னைத் தானே தாக்கிக்கொள்ளும் காட்சி, வீடியோவின் மூலம் உறுதியாகியுள்ளது.அவரது தலையில் அடிபட்டதும் இப்படித்தான். ராஜா சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள்மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். காவலர்களைத் தாக்கியவர்களை விரைவில் கைதுசெய்வோம்’என்று தெரிவித்திருக்கிறார்.

ராஜா சிங்… உங்களுக்கு இந்த அவமானம் தேவையா ..!?