எலும்பை இரும்பாக்கி, இதயத்தை பாதுகாக்கும் அவரைக்காய் குழம்பு

 

எலும்பை இரும்பாக்கி, இதயத்தை பாதுகாக்கும் அவரைக்காய் குழம்பு

கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், இரும்புச்சத்து உள்ளிட்ட தாதுச்சத்து நிறைந்த அவரைக்காயை குழம்பு செய்து சாப்பிட்டால் எலும்புகள் வலுப்பெறும். இதயத்துக்கு நல்லது

கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், இரும்புச்சத்து உள்ளிட்ட தாதுச்சத்து நிறைந்த அவரைக்காயை குழம்பு செய்து சாப்பிட்டால் எலும்புகள் வலுப்பெறும். இதயத்துக்கு நல்லது.

தேவையானப்பொருட்கள் :

அவரைக்காய் : 100 கிராம்
சின்னவெங்காயம் :10(பொடியாக நறுக்கவும்)
தக்காளி : 1(பொடியாக நறுக்கவும்)
புளிக்கரைசல் : 1 கப்
சாம்பார் தூள் : 2 கரண்டி
மஞ்சள்தூள் : 1 தேக்கரண்டி
கத்திரிக்காய் அல்லது முருங்கைக்காய் அல்லது பூசணிக்காய் : 100 கிராம்
உளுந்தம்பருப்பு : 1 தேக்கரண்டி
கடுகு :1 தேக்கரண்டி
கறிவேப்பிலை : சிறிதளவு
தேங்காய் விழுது : 3 கரண்டி

செய்முறை :

அவரைக்காயை நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி குறைந்தபட்சம் 8 மணிநேரம் ஊறவிடவும்.
குக்கரில் நன்றாக வேகவைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடானவுடன் நறுக்கிய வெங்காயம் தக்காளி மற்றும் காய்கறியை சேர்த்து வேகவிடவும்.

பிறகு மஞ்சள்தூள் சாம்பார்தூள் சேர்த்து பச்சைவாடை போகும்வரை கொதிக்க விடவும்.
வேகவைத்த அவரையை சேர்க்கவும்.

புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும்.
அரைத்த தேங்காய்விழுதை சேர்த்து இரண்டு நிமிடத்தில் இறக்கவும்.

கடாயில் 1 கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும்.

kolam

சூடான சாதத்துடன் பரிமாறவும்.