எலும்பும் தோலுமாய் உள்ள யானையை போர்வை போட்டு மறைத்து திருவிழா கொண்டாட்டம்! வைரலாகும் புகைப்படம்

 

எலும்பும் தோலுமாய் உள்ள யானையை போர்வை போட்டு மறைத்து திருவிழா கொண்டாட்டம்! வைரலாகும் புகைப்படம்

இந்நிலையில், தாய்லாந்தைச் சேர்ந்த சேவ் எலிபென்ட்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு பெரஹரா விழாவில் யானைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டது

எலும்பும் தோலுமாய் உள்ள யானையை போர்வை போட்டு மறைத்து திருவிழா கொண்டாட்டம்! வைரலாகும் புகைப்படம்

இலங்கையில் நடைபெறும் பெரஹரா விழாவிற்கு கொண்டுவரப்பட்ட ஒரு யானை மெலிந்த நிலையிலிருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் பாரம்பரியமிக்க புத்த திருவிழாவாக பெரஹரா கொண்டாரப்படுகிறது.  10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவில் யானைகள் அணுவகுப்பு, கண்கவர் கலைநிகழ்ச்சிகள், இசை கச்சேரி ஆகியவை நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டும் பெரஹரா திருவிழா இந்த மாதம் 5 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த விழாவில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் பங்கேற்றுள்ளன. 

இந்நிலையில், தாய்லாந்தைச் சேர்ந்த சேவ் எலிபென்ட்ஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு பெரஹரா விழாவில் யானைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டது. உலக யானைகள் தினமான ஆகஸ்ட் 13 ஆம் தேதி வெளியிட்ட அந்தப் பதிவில் டிக்கிரி என்ற உடல் மெலிந்த நிலையில் எலும்பும் தோலுமாக மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ள பெண் யானையின் புகைப்படத்தை பதிவிட்டு, அந்த யானை பெரஹரா விழாவிற்கு கொண்டு செல்லப்பட்டு அலங்காரப் போர்வையிட்டு மறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டை பதிவிட்டுள்ளது. 

யானையின் மீது போர்த்தப்பட்டிருக்கும் உடைகளின் மூலமாக அதன் பலவீனமான உடல்நிலை மறைக்கப்பட்டுள்ளது. யானைகளுக்கு அமைதியான உலகை நம்மால் கொடுக்க முடியாது. அன்பு செய்வது, எந்த உயிருக்கும் தீங்கும் செய்யாதது, இரக்கம் காட்டுவது. இவைகள்தான் புத்த மதத்திற்கான வழி. ஆனால் இங்கு யானைகள் துன்புறுத்தப்படுகிறது. இதற்கு இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பதிவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.