எலிசபெத் ராணி விரும்பி சாப்பிடும் இந்திய உணவு எது தெரியுமா.! ஆச்சர்யப்பட வைத்த அறிக்கை..!?

எலிசபெத் ராணி விரும்பி சாப்பிடும் இந்திய உணவு எது தெரியுமா.! ஆச்சர்யப்பட வைத்த அறிக்கை..!?

காலை உணவில் உப்புமா,கிச்சடி என்று சொன்னாலே நம்ம ஊரில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ‘இன்னைக்கும் கிச்சடியா…!?’ என்று அலுத்துக்கொள்வதைப் பார்த்திருப்போம்.இங்கிலாந்து ராணி எலிசபெத் தனக்கு பிடித்த உணவுகளில் மிக பிடித்த உணவுகள் என்ற லிஸ்ட்டில் நம்மூர் ‘கிச்சடியும்’ இடம் பிடித்திருக்கிறது என்பதுதான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

elizabeth

ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸுக்கு மறுநாள் ராணி,இளவரசி உட்பட  அரச குடும்பத்து  வாரிசுகள் பலரும்  தங்கள் காலை மெனுவில் இந்திய உணவை உண்ணுகிறார்களாம் அதுவும் ‘கிச்சடியை’ கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்களாம். ராணி எலிசபெத் செயின்ட் மேரி மக்தேலேனா  ஆலயத்திற்கு தனது குடும்பத்தினருடன் சென்று திரும்பியதும் அன்று காலை உணவில் ஒரு பௌல் ‘கெஜீரீ’ சாப்பிடுவார்களாம். கேஜீரீ என்பது மீன்,அரிசி மற்றும் வேகவைத்த முட்டைகள் ஆகியவைகளால் செய்யப்படும்  உணவாகும். 

இந்த தகவல் அரணமனை அனுப்பிய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இதைப் படித்த ‘பேட்ரிக் பிரெஞ்ச்’  என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதைப்பற்றி கூறியிருப்பதாவது,”தி ஹெர்ட்டி பிரேக்கி எனப்படும் ஆங்கிலேய உணவு இந்தியாவில் 14ஆம் நூற்றாண்டில் உருவானது, அது பிளாக்டு ஸ்மோக்டு ஹேடாக்,அரிசி,வேகவைத்த முட்டைகளை கிரீம், கர்ரி தூளை உபயோகித்து செய்யப்படுவது”என்று எழுதியிருக்கார்.அதைப்பார்த்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் லைக்ஸ்,ஷேர்ஸ் பரபரக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கெஜீரீ என்பது உண்மையில் ஒரு பிரிட்டிஷ் கலாச்சாரத்தில் செய்யப்படும்  ஒரு இந்திய உணவுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதனை ராணியும்  அவரின் அரச குடும்பத்தினரும் சேர்ந்து கிறிஸ்துமஸ் தினத்தின் மறுநாள் தங்களது காலை உணவாக தங்களது சந்திகிரிங்ம் வீட்டில் சாப்பிடுகின்றனர்(Sandgringham House)

Sandringham House

கிச்சிடி துவரம் பருப்பு, அரிசியும் சேர்த்து செய்த கலவை இதனை தயிருடன் சாப்பிடத்தருவர், ஆனால் கெஜீரீ மீன் துண்டுகளையும், வேகவைத்த அரிசி,முட்டை, பார்சிலி,உளர் திராட்சை, கிரீம், கர்ரி தூளை வைத்து சமைக்கப்படுகிறது. 

இதில் ஒரு வித்தியாசம் உண்டு, கிச்சடியை சூடாக சாப்பிட்டால் நல்லாயிருக்கும் ஆனால் இந்த கெஜீரீயை சூடாகவும், ஆறவைத்து சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும். அரச குடும்பத்தினருக்கு இந்திய உணவுகள் மீது கொள்ளை பிரியம் உள்ளதாம்!

இனிமே நம்ம வீடுகளில் ‘இங்கிலாந்து ராணியே கிச்சிடிதான் சாப்புடுறாங்களாம் உங்களுக்கென்ன சாப்பிட்றதுக்கு’ என்ற குரல் பலமாக ஒலிக்கும் என்று நம்பலாம்.