எலிகளிடம் இருந்து பயிரை காப்பாற்றி சேர்த்த பணம் ! பணத்தையே எலி சாப்பிட்ட அவலம் !

எலிகளிடம் இருந்து பயிரை காப்பாற்றி சேர்த்த பணம் ! பணத்தையே எலி சாப்பிட்ட  அவலம் !

எலிகளிடம் இருந்து பயிரைக் காப்பாற்றி விவசாயத்தில் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணத்தை கடைசியில் எலியிடம் இழந்துள்ளார் கோவை மாவட்ட விவசாயி ஒருவர்.

எலிகளிடம் இருந்து பயிரைக் காப்பாற்றி விவசாயத்தில் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணத்தை கடைசியில் எலியிடம் இழந்துள்ளார் கோவை மாவட்ட விவசாயி ஒருவர்.

வெள்ளியங்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி ரங்கராஜ் விவசாயத்தில் கிடைத்த ரூ.50,000 ரொக்கத்தை வங்கியில் செலுத்தாமல் தனது வீட்டில் ஒரு பாதுகாப்பற்ற பையில் வைத்துள்ளார்.

RATEAT

ஒரு மாதம் கழித்து பணம் எடுக்க சென்ற ரங்கராஜூ அதிர்ச்சி அடைந்தார். அந்த பையில் ரூபாய் நோட்டுகள் தூள் தூளாக கிழிக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த விவசாயி எப்படி பணம் கிழிந்தது என பார்க்கும்போது வீட்டில் சுற்றித் திரியும் எலிதான் பணத்தை கடித்து தின்றுள்ளதை கண்டறிந்தார். பின்னர் கிழிந்த நோட்டுக்களுடன் வங்கிக்கு சென்றார் விவசாயி. ரூபாய் நோட்டுகள் கண்டபடி கிழிந்திருப்பதால் மாற்றித் தரமுடியாது என கூறி விட்டனர். இதனால் சோகம் அடைந்த விவசாயி மனவேதனையுடன் வீடு திரும்பினார். இதேபோல் ஒரு சம்பவம் வடமாநிலத்திலும் 25 லட்சம் ரூபாயை ஆடு கடித்து தின்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நீதி… வீட்டில் எலிகளின் தொல்லையை ஒழிக்க ஒரு பூனை வளர்த்தால் நலம். பூனை பால் குடித்து விடும் என பயந்து வளர்க்காமல் விடுவதால் இதுபோன்ற பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது.