எறும்புத்தின்னியிலிருந்து வந்த கொரோனா வைரஸ்!

 

எறும்புத்தின்னியிலிருந்து வந்த கொரோனா வைரஸ்!

உலகில் பேரழிவை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸுடன் , எறும்புத்தின்னிகள் உடலிலுள்ள வைரஸும் ஒத்துப்போவது தெரியவந்துள்ளது

உலகில் பேரழிவை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸும் எறும்புத்தின்னிகள் உடலிலுள்ள வைரஸும் ஒத்துப்போவது தெரியவந்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு மருந்து கண்டுப்பிடிக்க அறிவியலாளர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எந்த விலங்கிடமிருந்து மனிதனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதை கண்டறிய நூற்றுக்கணக்கான விலங்குகளின் மரபணுக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் மனிதனை தாக்கிய கொரோனா வைரசை ஒத்த வைரஸ் எறும்புத்தின்னிகளின் உடலில் இருப்பது தெரியவந்துள்ளது.

Pangolins

இதனால், கொரோனாவை போன்ற மற்றோரு பாதிப்பு எதிர்காலத்தில் ஏற்படலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உ ணவுக்காவும், பாரம்பரிய மருத்துவத்திற்காகவும் அதிகளவு எறும்புத்தின்னிகள் வியாட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. இதன் மூலம் கொரோனாவை போன்றதொரு வைரஸ் மீண்டும் மனிதர்களுக்கு பரவலாம் என எச்சரிக்கப்படுகிறது. சீனாவில் கொரோனா தாக்கத்திற்கு பிறகு எறும்புத்தின்னியை விற்பதற்கு தடை விதிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.