‘எரும சாணி’ விஜய் இயக்கும் படத்திற்காக 7 கிலோ உடலைக் குறைத்த அருள்நிதி

 

‘எரும சாணி’ விஜய் இயக்கும் படத்திற்காக 7 கிலோ உடலைக் குறைத்த அருள்நிதி

இது முழுக்க கல்லூரியை களமாக கொண்ட உண்மைக் கதை. அருள்நிதி இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானவுடன் தனது கதாபாத்திரத்திற்காக உடலை ஏழு கிலோ வரை குறைத்துவிட்டார். அவர் ஷூட்டிங்கிற்கு வந்த அனைவரும் அவரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டோம்.” என்று கூறினார்.

 

தமிழ் சினிமாவில் வித்தியசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்ற பெயர் பெற்றவர் அருள்நிதி. இவர் தற்போது எரும சாணி என்ற யூட்யூப் சேனலின் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். 

arulnithi-09

இது பற்றிப் பேசிய விஜய் “இது முழுக்க கல்லூரியை களமாக கொண்ட உண்மைக் கதை. அருள்நிதி இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானவுடன் தனது கதாபாத்திரத்திற்காக உடலை ஏழு கிலோ வரை குறைத்துவிட்டார். அவர் ஷூட்டிங்கிற்கு வந்த அனைவரும் அவரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டோம்.” என்று கூறினார்.

படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் அருள்நிதியின் நண்பனாக நடிக்கவும் இருக்கிறார் விஜய். மேலும் ஷூட்டிங் ஆரம்பித்து விட்டதாகவும் கூறினார்.

vijay-es

இந்த படத்தின் ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான அரவிந்த் சிங்க் பேசிய போது, “டிமான்டி காலனி படத்திலிருந்தே இருவரும் பழகி வருகிறோம். நட்பே துணை படப்பிடிப்பில் விஜயை சந்தித்தேன். அவர் என்னிடம் இந்த  கதையின் ஸ்கிரிப்ட்டை என்னிடம் சொன்னார். நான் இந்த கதைக்கு அருள்நிதியை சிபாரிசு செய்தேன், அதுபோலவே அவருக்கும் கதை பிடித்துவிட்டது, பின்னர் படக்குழுவை முடிவு செய்தோம்” என்றும் கூறினார்.