‘எரிப்பதைக் கைவிடுங்கள்.. புகையில்லா பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுங்கள்’… பள்ளிக் கல்வித்துறை வேண்டுகோள் !

 

‘எரிப்பதைக் கைவிடுங்கள்.. புகையில்லா பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுங்கள்’… பள்ளிக் கல்வித்துறை வேண்டுகோள் !

பொங்கல் பண்டிகையின் போது சூரிய வழிபாடு, மஞ்சு விரட்டு என அனைத்து கிராமங்களிலும் ஆரவாரமாக இருக்கும்.

பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் சில நாட்களே  உள்ள நிலையில், மக்கள் பண்டிகையைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். பொங்கல் பண்டிகையின் போது சூரிய வழிபாடு, மஞ்சு விரட்டு என அனைத்து கிராமங்களிலும் ஆரவாரமாக இருக்கும்.

ttn

பொங்கலுக்கு முன் தினம், ” பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற நோக்கோடு போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. போகிக் கொளுத்துவது நன்மை என்றாலுமே, மக்கள் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களைக் கொளுத்துவதால் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.சி கருப்பணன் எச்சரிக்கை விடுத்திருந்தார். 

ttn

இந்நிலையில், பொங்கல் பண்டிகையைப் புகை இல்லாத பண்டிகையாகக்  கொண்டாட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், போகியின் போது பழைய குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட சுற்றுச் சூழல் மாசுபாடு விளைவிக்கும் பொருட்கள் எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அனைத்து பள்ளிகளிலும் புகை இல்லாத பண்டிகை கொண்டாடுவது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், போகிக் கொளுத்துவதின் மூலம் அதிலிருந்து வெளியாகும்  டயாக்ஸின், ஃப்யூரன் போன்ற நச்சு வாயுக்கள் வெளியாகி, அது உயிரினங்களுக்குச் சுவாச கோளாறை ஏற்படுத்தும் என்பதால் எரிப்பதைக் கைவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது,