எம்.பி.யானதும் கலெக்‌ஷனில் இறங்கிய வைகோ | தொண்டர்கள் அதிருப்தி | வைரலாகும் வீடியோ!

எம்.பி.யானதும் கலெக்‌ஷனில் இறங்கிய வைகோ | தொண்டர்கள் அதிருப்தி | வைரலாகும் வீடியோ!

அடுத்த முதல்வர் என்று தொண்டர்களில் எழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட்ட மதிமுக… வைகோவின் தவறான அரசியல் கணிப்புகளால், கட்டெறும்பாகி, இருக்கும் இடம் தெரியாமல் போயிருக்கிறது. அதிமுகவுடனும், திமுகவுடனும் விஜய்காந்தை சேர விடாமல், முதல்வர் ஆசைக் காட்டி தேமுதிக வையும் தேய்ந்து போக செய்த வீர வரலாறு எல்லாம் வைகோவிற்கு உண்டு. இந்நிலையில், மதிமுகவின் பெயரை மீட்டெடுக்கும் முயற்சியில் சிங்கிள் ஆளாக களமிறங்கி பாராளுமன்றத்தில் எம்.பியாக கர்ஜித்து வந்த வைகோ, மதிமுகவின் அடிப்படைக் கட்டமைப்பை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். 

மதிமுகவின் பொது செயலாளர் வைகோவுடன் செல்ஃபி அல்லது புகைப்படம் எடுக்க விரும்பும் கட்சி தொண்டர்கள், கட்சிக்கு குறைந்தபட்ச நிதியாக 100 ரூபாய் வழங்க வேண்டும் என்று ம.தி.மு.க தலைமை கேட்டுக் கொண்டுள்ளது. அதோடு வைகோவுக்குச் சால்வை அணிவிப்பதை தவிர்த்து, கட்சிக்கு நிதி வழங்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் வைகோ கட்சி சார்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, அவருடன் புகைப்படம் எடுக்க விருப்பப்படும் தொண்டர்களிடம் 100 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வைகோ நேற்று வேலூர் வழியாக காரில் கிருஷ்ணகிரிக்கு சென்றார். அப்போது தொண்டர்கள் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பினால், 100 ரூபாய் கொடுக்க வேண்டும்’’ என்று மாவட்ட நிர்வாகிகள் அறிவுறுத்தியிருந்தனர். இதனிடையே ஆம்பூர் பேருந்து நிலையத்தின் அருகே வந்திறங்கிய வைகோவை உற்சாகமாக வரவேற்ற தொண்டர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க முயற்சித்தனர்.

அப்போது தொண்டர் ஒருவர் 100 ரூபாய் இல்லாமல் புகைப்படம் எடுக்க வைகோ அருகில் சென்றார். 
கட்சிக்கு நிதி கொடுக்காமல், தொண்டர் ஒருவர் தன்னுடன் புகைப்படம் எடுக்க வருவதை கவனித்த வைகோ, ”காசு இல்லையா, அப்போ போட்டோ எடுக்க முடியாது” என கறாராக பேசி அந்த தொண்டைத் திருப்பி அனுப்பினார். இதனால் அந்த தொண்டர் வருத்தத்துடன் திரும்பி சென்றார். இந்த சம்பவம் அங்கிருந்த தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.