எம்.பி பதவி கேட்டு டெல்லியில் முற்றுகையிடும் தலைவர்கள்… நெருக்கடியில் இ.பி.எஸ்!

 

எம்.பி பதவி கேட்டு டெல்லியில் முற்றுகையிடும் தலைவர்கள்… நெருக்கடியில் இ.பி.எஸ்!

தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலம் வரும் ஏப்ரல் மாதத்தில் காலியாக உள்ளது. தமிழகத்தில் தற்போதுள்ள எம்.எல்.ஏ-க்கள் பலத்தின் அடிப்படையில் அ.தி.மு.க, தி.மு.க தலா மூன்று இடங்களில் வெற்றி பெற முடியும். மூன்று இடங்களிலும் தி.மு.க வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலம் வரும் ஏப்ரல் மாதத்தில் காலியாக உள்ளது. தமிழகத்தில் தற்போதுள்ள எம்.எல்.ஏ-க்கள் பலத்தின் அடிப்படையில் அ.தி.மு.க, தி.மு.க தலா மூன்று இடங்களில் வெற்றி பெற முடியும். மூன்று இடங்களிலும் தி.மு.க வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

edapadi-palanisamy

அ.தி.மு.க-வில்தான் மூன்று இடங்களில் யாரை நிறுத்துவது என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணி ஒரு ஒரு இடத்தை சமமாக பிரித்துக்கொண்டது. மூன்றாவது இடத்தை பா.ம.க-வுக்கு கொடுத்தது. ஆனால், இந்த முறை கூட்டணிக் கட்சிக்கு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மூன்று இடங்களிலும் அ.தி.மு.க-வே போட்டியிடலாம் என்ற சூழ்நிலையில்தான் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஓ.பி.எஸ் அணிக்கு ஒன்றை ஒதுக்கிவிட்டு இரண்டு இடங்களில் தன்னுடைய ஆதரவாளர்களை நிறுத்திவிட வேண்டும் என்று எடப்பாடி திட்டமிட்டு வருகிறார். அதேபோல், கட்சியில் தனக்குள்ள அதிகாரத்தை நிரூபிக்க இரண்டு இடங்களைக் கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் துடித்து வருகிறார். இந்த போட்டியில் யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மற்ற மூத்த அமைச்சர்களும் மூன்றாவது இடம் தங்கள் ஆதரவாளருக்கு வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

ops-09a

இதற்கிடையே மூன்றாவது எம்.பி சீட்டை கைப்பற்றி மாநிலங்களவைக்குள் மீண்டும் நுழைந்துவிட வேண்டும் என்று ஜி.கே.வாசன் நினைக்கிறார். இதனால், டெல்லியிலிருந்து அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளார் ஜி.கே.வாசன். இது பற்றி நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

gk-vasan-009

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி மூலமாக வாசன் காய்நகர்த்தி வருகிறார். பிரணாப் முகர்ஜி மூலம் ஆர்.எஸ்.எஸ்-க்கு அழுத்தம் கொடுத்து, ஆர்.எஸ்.எஸ் மூலம் பா.ஜ.க-வுக்கு அழுத்தம் கொடுத்து, பா.ஜ.க மூலம் எடப்பாடிக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதாம். அழுத்தம் வந்தாலும் தன்னுடைய ஆதரவாளருக்கு மூன்றாவது இடத்தை ஒதுக்க எடப்பாடி முயன்று வரும் நிலையில் டெல்லிக்கே சென்று அழுத்தம் கொடுக்க ஜி.கே.வாசன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பட்ஜெட் கூட்டத் தொடரின் போது நீங்கள் டெல்லி வர வேண்டியிருக்கும் என்று பிரணாப் முகர்ஜி கூறியதன் அடிப்படையில் அழைப்புக்காக காத்திருக்கிறாராம் ஜி.கே.வாசன். அழைப்பு வந்ததும் டெல்லிக்கு சென்று பிரணாப் முகர்ஜி மூலமாக முக்கியத் தலைவர்களை சந்தித்து எம்.பி சீட்டை உறுதி செய்துவிட்டு தமிழகம் வருவது என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஜி.கே.வாசன். எடப்பாடிக்கா, ஓ.பன்னீர்செல்வத்துக்கா, ஜி.கே.வாசனுக்கா… யாருக்கு மூன்றாவது இடம் என்ற சண்டை அ.தி.மு.க-வில் சூறாவளியைக் கிளப்பியுள்ளது.