எம்.பி-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்ய எதிர்ப்பு! – தமிழகத்துக்கு ஒதுக்க கோரிக்கை

 

எம்.பி-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்ய எதிர்ப்பு! – தமிழகத்துக்கு ஒதுக்க கோரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக எம்.பி-க்கள் நிதி தமிழகத்துக்கு மட்டுமே ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக எம்.பி-க்கள் நிதி தமிழகத்துக்கு மட்டுமே ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

CENTRAL-CABINET-67

கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் மத்திய அமைச்சரவை இன்று சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பொத்தாம் பொதுவாக பார்க்கும்போது தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அளிக்கப்படுவதற்கு ஆதரவு எழுந்துள்ளது. ஆனால், தொகுதி மக்களுக்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது, தற்போது கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில் மாவட்ட மருத்துவமனைகளுக்குக் கூட உதவி செய்ய முடியாத நிலைக்கு எம்.பி-க்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், தொகுதிக்கு என்ன நல்லது செய்தீர்கள் என்ற கேள்வி எம்.பி-க்களிடம் மக்கள் கேட்கும் நிலை உருவாகும்.
கொரோனா தொற்று தொடங்கிய நிலையில் தி.மு.க எம்.பி-க்கள் எல்லோரும் போட்டிப் போட்டுக்கொண்டு தங்கள் தொகுதிக்குட்பட்ட மாவட்ட மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்தனர். மாவட்ட மருத்துவமனைகளில் மாஸ்க் இல்லை, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று கூறினால் உடனடியாக ஆர்டர் செய்து வாங்கிக்கொடுத்தனர். 

kanimozhi

தூத்துக்குடி மருத்துவமனையில் ஆய்வு செய்த கனிமொழி எம்.பி-யிடம் கொரோனா பயணிகளை அழைத்து செல்ல மருத்துவமனையில் லிஃப்ட் வசதி செய்து தர வேண்டும் என்றால், அடுத்த நொடியே தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பணத்தை ஒதுக்கீடு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தார். இப்படி இருக்கும்போது தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து செய்யப்படுவதற்கு தமிழக எம்.பி-க்கள் எதிர்ப்ப தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழக அரசு ரூ.3000ம் கோடி கேட்ட நிலையில், மத்திய அரசு வெறும் ரூ.500 கோடியை ஒதுக்கியது. இதுவே, கொரோனா தொற்று மிகக் குறைவாக இருக்கும் மாநிலங்களுக்கு கூட அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு தமிழகத்தை புறக்கணித்தது. அதிக ஒதுக்கீடு செய்யப்பட்ட மாநிலங்கள் எல்லாம் பா.ஜ.க ஆளும் மாநிலங்கள், பா.ஜ.க செல்வாக்கு மிக்க மாநிலங்கள் என்று கூறப்படுகின்றன. தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் பா.ஜ.க அரசு, தமிழக எம்.பி-க்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை வேறு மாநிலத்துக்கு ஒதுக்கிவிடலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

bjp-modi

எனவே, மத்திய அரசு எம்.பி-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை முற்றிலுமாக குறைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் அல்லது அந்த அந்த மாநில எம்.பி-க்களின் நிதி அந்த அந்த மாநிலத்துக்கே ஒதுக்கும்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.