எம். ஜி. ஆர் 102-வது பிறந்தநாள்; நடிகர் சங்கம் மரியாதை

 

எம். ஜி. ஆர் 102-வது பிறந்தநாள்;  நடிகர் சங்கம் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அவரது உருவபடத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அவரது உருவபடத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ஆரின் 102-வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக , நடிகர் சங்க வளாகத்தில் எம்ஜிஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

nadigar sangam

இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால், செயற்குழு உறுப்பினர் நந்தா மற்றும் நியமன செயற்குழு உறுப்பினர் மனோபாலா ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.