எம்.ஜி.ஆர் வரலாற்று படத்தில் நடிக்க ஆசை: மனம்திறந்த ஜெயம் ரவி

 

எம்.ஜி.ஆர் வரலாற்று படத்தில் நடிக்க ஆசை: மனம்திறந்த ஜெயம் ரவி

எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க தனக்கு ஆசை இருப்பதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை: எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க தனக்கு ஆசை இருப்பதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

‘அடங்க மறு’ படத்தை அடுத்து தனி ஒருவன் 2 படத்துக்காக தயாராகிக் கொண்டிருக்கும் நடிகர் ஜெயம் ரவி செய்தியாளர்களிடம் இன்று பேசினார்.

அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் பின் வருமாறு, 

யாருடைய வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க ஆசை?

வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் எம்.ஜி.ஆராக நடிக்கவே எனக்கு ஆசை. 

அரசியலுக்கு வருவீர்களா?

நான் ஓட்டு போடுகிறேன். அந்த வகையில் பல ஆண்டுகளாக அரசியலில் தான் இருக்கிறேன். மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை.

adanga maru

உங்களுடன் நடித்த கதாநாயகிகளில் யாரை பிடிக்கும்?

எனது முதல் கதாநாயகி சதாவை பிடிக்கும். ஜெனிலியா, அசின், ஸ்ரேயா என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

எந்த நடிகருடன் நடிக்க ஆசை?

கமலுடன் நடிக்க ஆசை. ஆனால், நிறைவேறவில்லை.

சில படங்களின் வெளியீட்டின்போது சம்பளத்தை விட்டு கொடுத்தீர்களே?

ஆமாம். சில நேரங்களில் தயாரிப்பு செலவு திட்டமிட்டதைவிட அதிகமாகி விடுகிறது. எனவே படத்தின் வெளியீட்டுக்கு கை கொடுக்க வேண்டியதாகி விடுகிறது.

மேலும், சினிமாவுக்கு குடும்ப ரசிகர்கள் மிகவும் முக்கியம் என்றும் முத்தக்காட்சி, நெருக்கமான காட்சிகளில் நடித்தால் குடும்ப ரசிகர்கள் பார்க்க வர மாட்டார்கள் என்றும் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.