“எம்.ஜி.ஆர் மலையாளி; ஜெயலலிதா பிராமணர்” இருந்தாலும் நாங்கள் அவர்களை ஏற்றுக்கொண்டோம்: அமைச்சர் செல்லூர் ராஜு

“எம்.ஜி.ஆர் மலையாளி; ஜெயலலிதா பிராமணர்”  இருந்தாலும் நாங்கள் அவர்களை ஏற்றுக்கொண்டோம்: அமைச்சர் செல்லூர் ராஜு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 72-வது பிறந்தநாள்  முன்னிட்டு மதுரையில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 72-வது பிறந்தநாள்  முன்னிட்டு மதுரையில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். 

ttn

அப்போது பேசிய அவர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாதனைக்கு மேல் சாதனை செய்கிறார். அவரை சாதாரணமாக எடை போட்டு விட்டார்கள். அதிமுகவில் 17 லட்சம் தொண்டர்கள் இருக்கும்போதே கருணாநிதியால் கோட்டை பக்கம் வரமுடியவில்லை. திமுக ரவுடிகளின் சரணாலயம். அண்ணா வளர்த்த கட்சியை தற்போது ஸ்டாலின் கார்ப்பரேட் கம்பெனியிடம் அடமானம் வைத்து விட்டார். உங்களுக்கு சுய சிந்தனை இல்லை போல, தமிழக மக்களுக்கு என்ன வேண்டும் என்பது ஒரு பீகாரிக்கு  தெரிந்துவிடுமா?’ என்றார்.

ttn

தொடர்ந்து பேசிய அவர், எல்லா மதத்தையும் அரவணைக்கும் கட்சி அதிமுக. எம்.ஜி.ஆர் மலையாளியாக இருந்தாலும் கட்சியை ஒன்றரை கோடி தொண்டர்கள் தூக்கி நிறுத்தி இருக்கிறோம். ஜெயலலிதா பிராமணராக இருந்தாலும் அவரை திராவிட கட்சியின் தலைவராக ஏற்றுக்கொண்டோம்’ என்று பரபரப்பாகப் பேசியுள்ளார்.