எம்.ஜி.ஆர் பற்றி அவதூறு பேச்சு: பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கஸ்தூரி!

 

எம்.ஜி.ஆர் பற்றி அவதூறு பேச்சு: பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கஸ்தூரி!

எம்.ஜி.ஆர் மற்றும் லதா பற்றி போட்ட ட்வீட்டுக்கும் மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.

சென்னை: எம்.ஜி.ஆர் மற்றும் லதா பற்றி போட்ட ட்வீட்டுக்கும் மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.

நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு பதிவு வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா- சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய போது ஆட்டம் ஸ்லோவாக சென்றது. 

இதனால் கடுப்பாகி போன கஸ்தூரி ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார். ‘என்னய்யா இது. பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க’ என்று பதிவிட்டிருந்தார். இதனால் சிஸ்கே ரசிகர்கள் கொதிப்படைந்தனர்.

இதனால் கடுப்பான நடிகை லதா கஸ்தூரியைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் . அவர் கூறியதாவது,’கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே..? அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா அவங்க நடிச்ச படத்துல இருந்தே சொல்லியிருக்கலாமே..? எதுக்கு நானும், ‘மக்கள் திலகமும்’ நடிச்ச படத்தைச் சொல்லணும்..?பப்ளிசிட்டி வேணும்ன்னா வேற எதையாவது செய்யலாம். இது அந்தப் பொன்னுக்குத் தேவையில்லாத வேலை’ என்று கடுமையாகத் திட்டியுள்ளார்.

இந்நிலையில் பலரும் விமர்சிக்க தொடங்கியதும் அப்செட் ஆன கஸ்தூரி, தான் பதிவிட்ட ட்வீட்டுக்கு விளக்கம் அளித்துள்ளது மட்டுமின்றி மன்னிப்பும் கேட்டுள்ளார். இது குறித்து தனது முக நூல் பக்கத்தில் கூறியதாவது ‘MGR அவர்களை தலைவராகவும் தெய்வமாகவும் மட்டும் பார்த்து நடிகராக அவர் வரலாற்றை மறைப்பது ரசிகனுக்கு அழகல்ல. இருப்பினும் இதில் யார் மனமும் புண் பட்டிருந்தால், என் மனமார வருந்துகிறேன்’ என்று பதிவு செய்துள்ளார். மேலும் நடிகை லதா அவர்களுக்கு போன் செய்து பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.

இதையும் படிங்க: இதை மட்டும் செய்யாதீங்க: அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்த இளையராஜா