எம்.ஜி.ஆரை அவமதித்த நடிகர் சங்கம்?

 

எம்.ஜி.ஆரை அவமதித்த நடிகர் சங்கம்?

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி நடிகர் சங்கத்தினர் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை: புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி நடிகர் சங்கத்தினர் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கம் உருவானதில் முக்கிய பங்கு வகிக்கும் பழம்பெரும் நடிகரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 31வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நடிகர் சங்கம் கட்ட பெரும் பங்களிப்பினை அளித்தவர் எம்.ஜி.ஆர் என்பதை கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், தற்போதைய நாசர் தலைமையிலான சங்க உறுப்பினர்கள் எம்.ஜி.ஆருக்கு நினைவஞ்சலி செலுத்தும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. 

vishal

கடந்த ஆண்டு நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும், எம்.ஜி.ஆரின் 30வது நினைவு தினத்தில் அவரது திரு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆனால், இந்த ஆண்டு நடிகர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் நடிகர் மனோபாலா மட்டுமே பங்கேற்று எம்.ஜி.ஆரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.

nadigarsangam

நடிகர் சங்கத்தின் முக்கிய கூட்டம் என்றாலே அதன் நிர்வாகிகள் பலரும் பல்வேறு காரணங்களை காட்டி கூட்டத்திற்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உள்ள நிலையில், எம்.ஜி.ஆரை அவமதிக்கும் விதமாக நடிகர் சங்கம் செய்துள்ள சம்பவம் அமைந்துள்ளது.