எம்.ஜி.ஆரின் பட தலைப்பை வாங்கி வைத்திருக்கும் கமல்

எம்.ஜி.ஆரின் பட தலைப்பை வாங்கி வைத்திருக்கும் கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரத்தின்  இறுதியிலும் போட்டியாளர்களுடன் கமல் உரையாடுவது வழக்கம். அந்த வகையில், சென்ற வார இறுதியில் போட்டியாளர்களுடன் உரையாடிய கமல் தன்னைப் பற்றி பல அப்டேட்டுகளைக் கொடுத்துள்ளார். 

‘இந்தியன் 2’ மற்றும் ‘தலைவன் இருக்கிறான்’ படங்களுக்காக தனது மீசையை எடுத்ததாக கூறிய கமல், அதன் தொடர்ச்சியாக ‘தேவர் மகன்’ படத்தை ரீமேக் செய்யும் ஆசையையும் வெளிப்படுத்தினார். அந்த ரீமேக் படத்தில், சிவாஜி வேடத்தில் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும், எம்ஜிஆரின் ‘நாளை நமதே’ படத்தலைப்பை வாங்கி வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
வழக்கம் போல், அவரை எப்போதும் துரத்திக் கொண்டிருக்கும் ‘மருதநாயகம்’ எப்போது வெளிவரும் என்கிற போட்டியாளரின் கேள்விக்கும் ‘இதே கேள்வி தான் தன் மனதிலும் இருப்பதாக கூறிய கமல், அது பற்றி தான் வேறு ஒரு திட்டம் வைத்திருப்பதாகக் கூறினார்.

அரசியலில் தான் எதிர்பார்த்த அளவுக்கான முன்னேற்றம் வாய்க்காவிட்டாலும், தொடர்ந்து சினிமா மூலமாகவும் தனது அரசியல் பயணத்தை பலப்படுத்த  கமல் திட்டமிட்டிருப்பது ‘நாளை நமதே’ படத் தலைப்பிலிருந்து புரிகிறது என்று அவரது ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.