எம்.ஜி.ஆரின் இரு விரல் புரட்சி; விஜய்யின் ஒரு விரல் புரட்சி: சர்ச்சை பேனர்களுக்கு ஓகே சொன்னாரா விஜய்?

 

எம்.ஜி.ஆரின்  இரு விரல் புரட்சி;  விஜய்யின்  ஒரு விரல் புரட்சி: சர்ச்சை பேனர்களுக்கு ஓகே சொன்னாரா விஜய்?

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் படத்திற்காக ஒட்டப்பட்ட பேனர்கள் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்துவது போல் இருக்கிறது.

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் படத்திற்காக ஒட்டப்பட்ட பேனர்கள் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்துவது போல் இருக்கிறது.

சர்கார் திரைப்படம்  உலகம் முழுவதும் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. வழக்கமாக விஜய் படம் ரிலீஸ் ஆகும் போது பேனர், போஸ்டர், கட்அவுட் என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வது வழக்கம். ஆனால் இந்த முறை மதுரை, திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் சர்கார் வெளியீட்டிற்குத் திரையரங்க வாயிலில் சென்னை ஜெயின் ஜார்ஜ் கோட்டை போன்ற அமைப்பை பல்வேறு நகரங்களில் அமைத்தனர்.

sarkarbanner

இதே போல் 1972ல் எம்.ஜி.ஆர் செய்தது இரு விரல் புரட்சி 2018ல் விஜய் செய்யப்போவது ஒரு விரல் புரட்சி என்று அரசியல் நெடி வீசும் வாசகங்களுடன் பல்வேறு நகரங்களில் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டிருந்தன. 

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் அடித்துள்ள அத்தனை போஸ்டர்களும், அவர்கள் வைத்து கோட்டை போன்ற நுழைவு வாயில்களும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின்  ஒப்புதலுடனேயே வைக்கப்பட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

முன்னதாக விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது தான் தன்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.