எம்.ஜி.ஆராக மாறி வரும் எடப்பாடி: தேடி வருவோருக்கு மூன்று வேளை உணவு: அதிமுகவினர் உற்சாகம்!

 

எம்.ஜி.ஆராக மாறி வரும்  எடப்பாடி: தேடி வருவோருக்கு மூன்று வேளை உணவு: அதிமுகவினர் உற்சாகம்!

சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு வரும் தொண்டர்கள், காவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு வரும் தொண்டர்கள், காவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அதிமுகவின் நிறுவனரும் தமிழகத்தின் முன்னாள்  முதல்வராகவும் இருந்த எம்.ஜி.ஆர், அவரது ராமவரம் தோட்டத்தில் வரும் தொண்டர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தினமும் மூன்று வேளையும் உணவு வழங்கி வந்தார். தன்னை  யார் சந்திக்க வந்தாலும் முதலில் எம்ஜிஆர் கேட்கும் முதல் கேள்வி சாப்பிட்டீங்களா? முதலில் சாப்பிட்டு விட்டு என்னை வந்து சந்தியுங்கள் என்று கூறுவார். விருந்தோம்பல் என்றாலே எம்.ஜி.ஆர் தான் என்று சொல்லும் அளவுக்கு எம்.ஜி.ஆரின் இந்தச் செயல் பாராட்டப்பட்டது.
.
இந்நிலையில் எம்.ஜி.ஆரின்  பாணியில் தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கிரீன்வேஸ் சாலை வீட்டுக்கு வருவோருக்குத் தினமும் உணவு வழங்கப்படுகிறது. இதுதவிர, வெயில் அதிகமாக இருந்தால் மோர், பழச்சாறு மற்றும் குறிப்பிட்ட இடைவேளைகளில் தேநீர், காபி, சமோசா ஆகியவையும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. 

பொதுமக்கள் அமர்ந்து சாப்பிடுவதற்காகவே டைனிங் டேபிள், கை கழுவும் இடம், கழிவறை போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தொண்டர்கள் மட்டுமின்றி கிரீன்வேஸ் சாலையில் காவல் பணியில் ஈடுபடும் போலீஸாரும் முதலமைச்சர் வீட்டில் சாப்பிடுவது வழக்கமாகியுள்ளது. இது எம்ஜிஆருக்கு செலுத்தும் உண்மையான மரியாதை என்று  அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.