எம்.ஐ டிவி 4A ப்ரோ 32 மற்றும் எம்.ஐ ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் இயர்போன் பேசிக் ஆகியவை இந்தியாவில் அறிமுகம்

 

எம்.ஐ டிவி 4A ப்ரோ 32 மற்றும் எம்.ஐ ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் இயர்போன் பேசிக் ஆகியவை இந்தியாவில் அறிமுகம்

எம்.ஐ டிவி 4A ப்ரோ 32 மற்றும் எம்.ஐ ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் இயர்போன் பேசிக் ஆகியவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: எம்.ஐ டிவி 4A ப்ரோ 32 மற்றும் எம்.ஐ ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் இயர்போன் பேசிக் ஆகியவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற சியோமி ரெட்மி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும் அதே நிகழ்ச்சியில் எம்.ஐ டிவி 4A ப்ரோ 32 மற்றும் எம்.ஐ ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் இயர்போன் பேசிக் ஆகியவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் புதிய எம்.ஐ டிவி 4A ப்ரோ மாடலின் விலை ரூ.12,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வருகிற மார்ச் 7-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இதன் விற்பனை ஃப்ளிப்கார்ட் மற்றும் Mi இணையதளம் மற்றும் Mi ஹோம் ஷோரூம்களில் தொடங்குகிறது.

head

எம்.ஐ ஸ்போர்ட்ஸ் ப்ளூடூத் இயர்போன் பேசிக் விலை ரூ.1,499 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் இதன் முன்பதிவு விற்பனை (ப்ரீ-ஆர்டர்) எம்.ஐ இணையதளத்தில் தொடங்குகிறது. இந்த இயர்போனில் ஸ்ப்ளாஷ் அண்ட் ஸ்வெட் ஃப்ரூப், 9 மணிநேர பேட்டரி திறன், கூகுள் அசிஸ்டென்ட் வசதி, 120 எம்.ஏ.ஹெச் பேட்டரி, 5 விதமான அளவுகளில் இயர்பட்ஸ் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல புதிய எம்.ஐ டிவியின் சிறப்பம்சங்களை பொறுத்தவரை 32 இன்ச் டிஸ்பிளே, 178 டிகிரி வியூ ஆங்கிள், இரண்டு 10வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்ட பேட்ச்வால் யு.ஐ, குரோம்காஸ்ட் பில்ட்-இன், கூகுள் அசிஸ்டென்ட் வசதி கொண்ட ப்ளூடூத் ரிமோட், இரண்டு யு.எஸ்.பி 2.0 போர்ட்கள், மூன்று HDMI போர்ட்கள், வைஃபை, இயர்போன் போர்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.