எம்.எல். ஏவின் பேனரை கிழித்ததற்காக ஊரே கூடி சூடம் ஏற்றி சத்தியம் செய்த விநோதம்! 

எம்.எல். ஏவின் பேனரை கிழித்ததற்காக ஊரே கூடி சூடம் ஏற்றி சத்தியம் செய்த விநோதம்! 

சிவகங்கை அருகே ஊர் திருவிழாவில் விருந்தினருக்கு வைத்த பேனரை கிழித்தது யார் என தெரியாததால் கிராமமே திரண்டு கோயிலில் சூடம்அணைத்து சத்தியம் செய்த விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. 

சிவகங்கை அருகே ஊர் திருவிழாவில் விருந்தினருக்கு வைத்த பேனரை கிழித்தது யார் என தெரியாததால் கிராமமே திரண்டு கோயிலில் சூடம்அணைத்து சத்தியம் செய்த விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. 

அநியாயம் பண்ணுபவர்களைத் தட்டிக்கேட்க திராணி இல்லாதவர்கள் சாமி முன் சூடத்தை ஏற்றி அதில் நான் தவறு இழைக்கவில்லை என சத்தியம் செய்வது பழங்காலத்திலிருந்தே நூதன வேண்டுதலாக பார்க்கப்படுகிறது. மேலும் ஊரில் ஏதேனும் பிரச்னை என்றால், சாமி முன்  சூடத்தை ஏற்றி, அணைத்து ‘நாங்கள் தப்பு செய்யவில்லை’ என சத்தியம் செய்வது சம்பிரதாயமாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆனா தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் இதுபோன்று சத்தியம் செய்வது முட்டாள் தனமாகவே பார்க்கபடுகிறது. அப்படி ஒரு அல்ப்பதனமான சம்பவத்திற்காக இப்படி செய்த செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

காளையார்கோவில் அருகே விளங்குடி கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்த காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் KR.ராமசாமியை வரவேற்று மாபெரும் பிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. கோவில் திருவிழாவுக்குள் புகுந்த சில மர்ம நபர்கள் அந்த பேனரை கிழித்து சேதப்படுத்தப்படுத்தியுள்ளனர். பேனரை கிழித்தவர்களை கண்டறிய கிராமத்தினர் அனைவரும் கோவிலில் சத்தியம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதனால் கோவிலில் கூடிய 100 ற்கும் மேற்பட்ட கிராமத்தினர் சூடம் ஏற்றி நான் தவறு செய்யவில்லை…. நான் பேனரை கிழிக்கவில்லை…. என சத்தியம் செய்துள்ளனர்.