எம்பி பதவியை இழப்பாரா கனிமொழி? | ஆரம்பமானது சர்ச்சை அரசியல்!

எம்பி பதவியை இழப்பாரா கனிமொழி? | ஆரம்பமானது சர்ச்சை அரசியல்!

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில், கடந்த தேர்தலில் பாஜக தமிழிசையை எதிர்த்து திமுக கனிமொழி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். தற்சமயம் எம்பியாகவும் நாடாளுமன்றத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த வாக்காளர் சந்தானகுமார் என்பவர், கனிமொழி வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். 

kanimozhi

இது தொடர்பாக சந்தானகுமார் தொடர்ந்த தேர்தல் வழக்கில், தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனுவில், கனிமொழியின் கணவர் அரவிந்தனின் வருமானத்தை பற்றி குறிப்பிடவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள சந்தானகுமார், இதனால், தேர்தலில் கனிமொழியின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தனது மனுவில் கோட்டுக் கொண்டார். 
இந்த வழக்கு நீதிபதி சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, இது தொடர்பாக பதில் அளிக்குமாறு கனிமொழி மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு நீதிபதி சுப்ரமணியம் ஒத்தி வைத்தார்.