எம்பிபிஎஸ், பிடிஎஸ் கவுன்சிலிங்: போலி இருப்பிடச் சான்று கொடுத்த 22 பேர் அதிரடி நீக்கம்!

 

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கவுன்சிலிங்: போலி இருப்பிடச் சான்று கொடுத்த 22 பேர் அதிரடி நீக்கம்!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் நடைபெற்றது. அதில், மொத்தம் 59 ஆயிரத்து 756 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

சென்னை:  போலி இருப்பிடச் சான்று கொடுத்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பித்த  22 மாணவர்களைத் தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குநரகம் நீக்கியுள்ளது.

mbbs

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் நடைபெற்றது. அதில், மொத்தம் 59 ஆயிரத்து 756 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதற்கான தரவரிசை பாலியலில்  218 பேர் வெளிமாநிலத்தவர்கள் என்பதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து, போலியாக இருப்பிடச் சான்று கொண்டு 2 மாநிலத்தவர்கள் விண்ணப்பித்த  விவகாரத்தில் அவர்கள் இருவரையும்  தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் நீக்கம் செய்தது. 

mbbs

இந்நிலையில் ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 22 பேர் போலி இருப்பிடச் சான்று கொடுத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதனால் இவர்களைத் தரவரிசை பட்டியலிலிருந்து தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குநரகம் அதிரடியாக நீக்கியுள்ளது. 

முன்னதாக மருத்துவ சேர்க்கையின் போது போலி சான்றிதழ் கொடுத்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.