எம்பிஏ படிப்பில் புதிய பிரிவு – பாடத்திட்டம், கட்டண விபரங்கள் உள்ளே

 

எம்பிஏ படிப்பில் புதிய பிரிவு – பாடத்திட்டம், கட்டண விபரங்கள் உள்ளே

எம்பிஏ பட்டப் படிப்பில் புதிய பிரிவை அறிமுகப்படுத்துவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி அமைப்பு (ஏஐசிடிஇ) ஒப்புதல் அளித்துள்ளது

எம்பிஏ பட்டப் படிப்பில் புதிய பிரிவை அறிமுகப்படுத்துவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி அமைப்பு (ஏஐசிடிஇ) ஒப்புதல் அளித்துள்ளது. 

எம்பிஏ – புதிய பிரிவு 

மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டும் படிப்புகளில் ஒன்று வணிக நிர்வாகம். எந்தப் பட்டப்படிப்பு படித்திருந்தாலும் அத்துடன் எம்பிஏ படிப்பையும் படித்தல் ஒரு மேலதிகத் தகுதியாகக் கருதப்படுகிறது. மருத்துவம், பொறியியல் படிப்புகளைத் தொடர்ந்து மவுசு கூடிய துறை சார்ந்த படிப்பு எம்பிஏ தான்.

mba

இந்நிலையில், எம்பிஏ – இன்னோவேஷன், வென்ட்சர் டெவலப்மெண்ட், என்டர்பிரனர்ஷிப் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் படிப்பை வரும் கல்வியாண்டில் தொடங்குவதற்கு அனுமதி கேட்டு நாடு முழுவதும் 15 கல்லூரிகள் ஏஐசிடிஇ அமைப்பிடம் விண்ணப்பித்திருந்தன. அவற்றில் சென்னையைச் சேர்ந்த இரு கல்லூரிகளும் அடங்கும். அதற்கு தற்போது ஏஐசிடிஇ ஒப்புதல் அளித்துள்ளது. 

பாடத்திட்டம் 

தொழில் முனைவோர் எம்பிஏ படிப்புக்கான பாடத் திட்டமானது பல்வேறு நிபுணர்கள் குழுவின் ஆலோசனையின் படி தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக மும்பை மற்றும் ஆமதாபாத் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த கல்வியாளர்களின் வழிகாட்டுதலின்படி அப்பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

mba

புதிய பார்வை கொண்ட  தொழில்முனைவோர்களை உருவாக்கும் நோக்கில் அதன் பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகவும், சுயமாக தொழில் தொடங்க விரும்பும் மாணவர்கள் அந்தப் படிப்பைத் தேர்வு செய்யலாம் என்றும் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டணம் 

பருவமொன்றுக்கு ரூ.85 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சம் வரை அப்படிப்புக்கு கட்டணமாக வசூலிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்த புதிய வகை படிப்பின் மூலம் வேலைவாய்ப்பு பெருகுவதுடன், புதிய தொழில் நிறுவனங்கள் அதிகமாகும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதையும் படிங்க 

ஸ்டிரைக் செய்து கைதான ஆசிரியர்.. கல்யாண மண்டபத்தில் மாணவர்களுக்கு பாடம்

ஆபாச இணையதளங்களின் மாயவலையில் இருந்து தப்புவது எப்படி? டாக்டர் ஷாலினியின் ஓபன் டாக்!