எம்ஜிஆருக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாதா? பாஜகவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்!

 

எம்ஜிஆருக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாதா? பாஜகவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்!

சமூகத்தை உருவாக்க உறுதிகொள்வோம்” என்று பதிவிட்டு சர்ச்சையை கிளப்பினர். இதற்கு பல்வேறு  தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த பதிவு  நீக்கப்பட்டது.

தமிழக பாஜகவின்  அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தனர்.

ttn

அதில் “மணியம்மையின் தந்தை ஈவே.ராமசாமியின் நினைவு தினமான இன்று!! குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஆதரித்து, போக்ஸோ (Pocso) குற்றவாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதிகொள்வோம்” என்று பதிவிட்டு சர்ச்சையை கிளப்பினர். இதற்கு பல்வேறு  தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த பதிவு  நீக்கப்பட்டது.

ttn

இந்நிலையில் இன்று எம்ஜிஆரின் 32ஆம் ஆண்டு நினைவு தினமும் கடைப்பிடிக்கப்படுகிறது.  இதுகுறித்து தமிழக பாஜகவின் டிவிட்டர் பக்கத்தில், ‘இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும்இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். பொன்மனச் செம்மல் என்று மக்களால் போற்றி புகழப்பட்ட டாக்டர் எம்.ஜி.யார் நினைவு தினமான இன்று அவரது ஈகை குணத்தை போற்றி பரப்புவோம்.’ என்று பதிவிடப்பட்டுள்ளது. 

ttn

அதில் எம்ஜிஆர் என்ற பெயருக்கு பதிலாக  எம்.ஜி.யார் என்று பதிவிடப்பட்டுள்ளது. இதை கண்ட நெட்டிசன்கள் அடேய் அட்மின் உனக்கு பெரியார் பத்திதான் தெரியாதுன்னு பார்த்தா? எம்ஜிஆருக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாதா என்றும் என்னப்பா கூட்டணி தர்மம்மா என்றும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.