எம்ஜிஆரின் கொள்கைகளை பரப்ப என்ன செய்தீர்கள்? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

 

எம்ஜிஆரின் கொள்கைகளை பரப்ப என்ன செய்தீர்கள்? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவை விழா நடத்தாமல்  திறக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை : மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவை விழா நடத்தாமல்  திறக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில்  தமிழக அரசு சார்பில், எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து வழக்கறிஞர் தினேஷ் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், அரசியல் லாபத்துக்காக எம்ஜிஆர் நினைவு வளைவு அமைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டினார். இதனால் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவைத் திறப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.இதனையடுத்து எம்ஜிஆரை பெருமைப்படுத்த நினைவு வளைவு அமைத்துள்ளோம். எனவே நினைவு வளைவு திறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

இந்நிலையில் இது குறித்த விசாரணையில், ஆண்டு முழுவதும் நூற்றாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பேனர் வைத்தீர்கள். அவரின் கொள்கை, கருத்துகளைப் பரப்ப என்ன செய்தீர்கள்? பார்வையற்றோர் காதுகேளாதோர் நலனுக்கு என்ன செய்தீர்கள்? அவர்களுக்குப் பள்ளிகள் திறந்தீர்களா? அல்லது ஏற்கெனவே உள்ள பள்ளிகளுக்கு வசதிகள் செய்து கொடுத்தீர்களா? இதுபோன்ற எந்தத் திட்டத்துக்காவது செயல்திட்டத்தை உருவாக்கிவிட்டு வாருங்கள். அதுவரை திறக்க அனுமதிக்க மாட்டோம்’ என நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் விழா நடத்தாமல் மெரினாவில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவைத் திறக்கலாம் என அனுமதி அளித்தனர். வழக்கு விசாரணை பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.