எம்ஜிஆராக அச்சு அசலாக மாறியுள்ள நடிகர் அரவிந்த்சாமி: வைரல் போட்டோ!

 

எம்ஜிஆராக அச்சு அசலாக மாறியுள்ள நடிகர் அரவிந்த்சாமி: வைரல் போட்டோ!

இதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை  வரலாற்றைப் பலரும் படமாக எடுக்க முனைப்புக் காட்டி வந்த நிலையில்  இயக்குநர் விஜய் அதனைச் செயல்படுத்தி வருகிறார்.

kangana

 

தலைவி என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில்  ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமி நடிக்க இருக்கிறார்.  இதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

aravind

இந்நிலையில் நடிகர் அரவிந்த்சாமி மீசையின்றி எம்ஜிஆர் போல மாற்றியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்குக் கதாசிரியரும் இயக்குநர்  ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் கதை எழுதுகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருவது  குறிப்பிடத்தக்கது.