எமனாகும் பிஸ்கட் … தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்!

 

எமனாகும் பிஸ்கட் … தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்!

காலையில் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் போது, அவர்களுக்கு என்ன ஸ்நாக்ஸ் வைத்து அனுப்புவது என்பது தான் பலரது வீட்டின் பரபரப்பாக இருக்கும். என்ன தான் நாம் ஆரோக்கியமான பழங்களையோ, காய்கறிகளையோ வைத்து அனுப்பினாலும், நிறைய குழந்தைகள் பிஸ்கட், சாக்லேட் என்று அடம்பிடித்து வாங்கிச் செல்கிறார்கள். எதையோ சாப்பிட்டு வந்தால் சரி என்று வைத்து அனுப்பும் பெற்றோரா நீங்க… அப்ப உங்களுக்கு தான் இந்த கட்டுரை அவசியம் தேவைப்படும். 

எமனாகும் பிஸ்கட் … தமிழகத்தை அச்சுறுத்தும் கலாசாரம்!

காலையில் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் போது, அவர்களுக்கு என்ன ஸ்நாக்ஸ் வைத்து அனுப்புவது என்பது தான் பலரது வீட்டின் பரபரப்பாக இருக்கும். என்ன தான் நாம் ஆரோக்கியமான பழங்களையோ, காய்கறிகளையோ வைத்து அனுப்பினாலும், நிறைய குழந்தைகள் பிஸ்கட், சாக்லேட் என்று அடம்பிடித்து வாங்கிச் செல்கிறார்கள். எதையோ சாப்பிட்டு வந்தால் சரி என்று வைத்து அனுப்பும் பெற்றோரா நீங்க… அப்ப உங்களுக்கு தான் இந்த கட்டுரை அவசியம் தேவைப்படும். 

உணவின் சுவைக்கு ஆசைப்பட்டு ஆரோக்கியமான உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ரெடிமேட் உணவுகளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம். இதன் விளைவாக எண்ணற்ற நோய்கள் நம்மை நோக்கி ஓடி வந்துக் கொண்டிருக்கின்றன. குழந்தைகள் தான் இப்படி என்றால் பெரியவர்கள் கூட சுவைக்கு அடிமையாகி விடுகின்றனர். பள்ளி செல்லும் பெரும்பாலான குழந்தைகளுக்கு காலை உணவு பிரெட், பிஸ்கட்டுடன் முடிந்து விடுகிறது. இந்த பிஸ்கட்டுகளைத் தான் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தாலும் தருகிறோம். யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றாலும் பார்க்க செல்லும் போது வாங்கிப் போகிறோம்… குழந்தைகள் இருக்கும் உறவினர் வீடுகளுக்கு செல்கையில் கலர் கலராய் வாங்கிச் செல்கிறோம்.

இப்படி நம் வாழ்வில் இரண்டற கலந்திருக்கும் பிஸ்கட்கள் ஆரோக்கியமானது இல்லை என்பதே உண்மை. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் பிஸ்கட் பிஸ்கட் மிருதுவாக இருப்பதற்காக அதில் குளூட்டன் சேர்க்கப்படுகிறது.  பிஸ்கட்டின் சுவை வருவதற்காக சர்க்கரை, சுக்ரோஸ், சோடியம் பைகார்பனேட்  போன்றவை சேர்க்கப்படுகின்றன. இனிப்புக்காக சுக்ரோஸ் கலக்கப்படுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து விடுகிறது. இதனால் இதயம் சார்ந்த பிரச்சனைகள், கொழுப்பு சத்து அதிகரிப்பது, சர்க்கரை நோய் போன்ற பல வியாதிகள் வருவதற்கு இது வழிவகுக்கிறது.
சோடியம் அதிகம் இருப்பதால் இரத்த அழுத்தம் சிறுநீரகக் கற்கள், கெட்ட கொழுப்பு போன்றவை அதிகரிப்பதால் உடல் எடை அதிகரிக்கும். சிறு வயதிலேயே பிஸ்கெட்டுகளை அதிகம் சாப்பிடுவதால் செரிமான கோளாறுகள் ஏற்படும். உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்.  பிஸ்கட்டின் ஆயுட்காலத்தை நீட்டிக்க ஹைட்ரஜனேட்டட் க் கொழுப்புச் சத்தும் சேர்க்கிறார்கள். இதெல்லாம் கெட்ட கொழுப்பாக மாறி உடலில் தங்கி விடுகிறது.

அதிலும் கிரீம் பிஸ்கட்கள் இன்னும் கொடுமையானது. விதவிதமான வண்ணங்களிலும், வடிவங்களிலும் கிடைக்கும் பிஸ்கட்களை எல்லாம் உங்கள் குழந்தைகளை நெருங்கவே விடாதீர்கள்!
பிஸ்கட் எடுத்துக் கொள்வதற்கு பதிலாக பழங்கள், சுண்டல் என்று ஆரோக்கியமான உணவுகளை உடல்நலம் சரியில்லாதவர்கள் சாப்பிட வேண்டும். வெறும் சுவைக்காக மட்டுமே பிஸ்கட்டை தேர்ந்தெடுப்பதை விட இது போன்ற நார்ச்சத்து, சிறு தானியங்கள் என சத்துக்கள் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
பிஸ்கட்டின் பணியே பசியை அடக்குவது தான். எனவே பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தொடர்ந்து பிஸ்கட் கொடுத்தால் நாளடைவில் அவர்களுக்கு பசி எடுக்காது. இது மட்டுமின்றி பிஸ்கட்டின் இனிப்பு சுவைக்கு அவர்கள்  பழகி காரம், கசப்பு, புளிப்பு, உவர்ப்பு போன்ற மற்ற சுவைகள் அவர்களுக்குப் பிடிக்காமல் போய்விடும். குழந்தைகளையும் இயல்பிலிருந்து மாற்றி பிஸ்கட் மந்தம் ஆக்குகிறது. காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள் ஆகியவற்றை குழந்தைகள் வெறுப்பதற்கு இதுவும் முக்கிய காரணம். எனவே குழந்தைகளுக்கு தொடக்கத்திலிருந்தே ஆரோக்கியமான நம் பாரம்பரிய உணவுகளை கொடுத்து பழகுவது பெற்றோரின் கடமையே