எப்போ வருவார்? எப்போ போவார்? மோடி ஜின்பிங் நிகழ்ச்சி நிரல்

 

எப்போ வருவார்? எப்போ போவார்? மோடி ஜின்பிங் நிகழ்ச்சி நிரல்

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் செப்டம்பர் மாதம் 11 மற்றும் 12ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வருகை தர உள்ளனர். இந்த சந்திப்பின் நிகழ்ச்சி நிரல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் செப்டம்பர் மாதம் 11 மற்றும் 12ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வருகை தர உள்ளனர். இந்த சந்திப்பின் நிகழ்ச்சி நிரல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 11ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார் சீன அதிபர். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு மற்றும் கலாசார முறைப்படி வரவேற்கப்படுகிறது. பிற்பகல் 1.45மணிக்கு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு தனியார் நட்சத்திர விடுதியான ஐ.டி.சி. கிராண்ட் சோழாவுக்கு செல்கிறார். இதை அடுத்து மாலை 4.10 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள அர்சுனன் தபசுவிற்கு செல்கிறார் ஜின்பிங். மாலை 5 மணிக்கு அர்சுனன் தபசுவில் பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபரை வரவேற்கிறார். அங்கு இருநாட்டுத் தலைவர்களின் முதல் சந்திப்பு நடைபெறுகிறது. அர்சுனன் தபசுவில் இருநாட்டு தலைவர்களும் புகைப்படம் எடுத்துக் கொள்வதோடு, அர்சுனன் தபசுவின் வரலாறு குறித்து பிரதமர் மோடி சீன அதிபருக்கு விளக்கம் அளிக்கிறார். இதையடுத்து மாலை 5.10 மணிக்கு மாமல்லபுர கடற்கரை அருகிலுள்ள கிருஷ்ணா வெண்ணெய் பந்து பகுதியில் சிறிது நேர நடைபயணம் மேற்கொள்கின்றனர். பின்னர் மோடியும், ஜின்பிங்கும் மாலை 5.18 மணிக்கு மாமல்லபுர ரதக் கோயிலுக்கு செல்கின்றனர். அங்குள்ள கலைப் படைப்புகளை பார்வையிடுகின்றனர். பின்னர் மாலை மாலை 5.43 மணிக்கு கடற்கரை கோயிலுக்கு இருவரும் செல்கின்றனர். மாலை 5.55 மணிக்கு கடற்கரை கோயிலில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பார்வையிடுகின்றனர். மாலை 6 மணி முதல் 6.30 வரை கலாஷேத்திர கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மாலை 6.30 மணிமதல் 15 நிமிடங்கள் விருந்தினர்கள் அறையில் ஓய்வு எடுக்கும் அவர்கள், மாலை 6.45 முதல் இரவு 08.00 மணிவர கடற்கரை கோயிலில் இரவு உணவு உட்கொள்கின்றனர். பின்னர் இரவு 8.05 மணிக்கு ஐ.டி.சி. கிராண்ட் சோழாவுக்கு புறப்படுகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

mamallapuram

சுற்றுப் பயணத்தின் இரண்டாவது நாளான அக்டோபர் 12ம் தேதி காலை 9.45 மணிக்கு தாஜ் ஃபிஷ்ஷர்மேன்ஸ் கோவ் நட்சத்திர விடுதியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மச்சான் உணவகம் அருகே  நடைபயிற்சி, காலை 10.15 மணிக்கு டெட்-இ-டெட் சிற்றுண்டி உணவகத்தில் தேநீர் இடைவேளை, காலை 11.15 மணி முதல் 11.25 வரை பாதுகாக்கப்பட்ட இடத்தில் சிறிது நேரம் இளைப்பாறுகிறார் ஜின்பிங். காலை 11.25 மணிக்கு டான்கோ ஹாலுக்குப் புறப்பட்டு 11.30 மணி முதல் 12.15ரை உயர்மட்ட அலுவலர் குழுவினருடனான பேச்சுவார்த்தை. பின்னர் மதியம் 12.15 மணிக்கு கசாரினா உணவக விடுதியில் மதிய உணவுக்கு பின்னர் சென்னை விமான நிலையத்திற்கு புறப்படுகிறார் ஜி ஜின்பிங் அங்கு இருநாட்டு தலைவர்களுக்கும் உபசார விழா நடைபெறுகிறது.