எப்போதுமே இந்துத்துவா சித்தாந்தத்தை கைவிட மாட்டேன்! பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்த உத்தவ் தாக்கரே

 

எப்போதுமே இந்துத்துவா சித்தாந்தத்தை கைவிட மாட்டேன்! பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்த உத்தவ் தாக்கரே

எப்போதுமே இந்துத்துவா சித்தாந்தத்தை கைவிட மாட்டேன் என பா.ஜ.க.வுக்கு சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதிலடி கொடுத்தார்.

முதல்வர் பதவியை சமகாலம் விட்டு கொடுக்க பா.ஜ.க. மறுத்ததால், சிவ சேனா அந்த கட்சி உடனான 30 ஆண்டு கால  கூட்டணியை முறித்து கொண்டது. மேலும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி  அமைத்து சிவ சேனா மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைத்தது. இந்நிலையில், அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, சிவ சேனா,தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டு குறித்த கேள்விக்கு பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது: 

சோனியா காந்தி, சரத் பவார், உத்தவ் தாக்கரே

காங்கிரஸ் மற்றும்  தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்காக சிவ சேனா தனது அடிப்படை இந்துத்துவா சித்தாந்தத்தில் சமரசம் செய்து கொண்டது. சிவ சேனாவின் இந்துத்துவா தற்போது சோனியா காந்தியின் காலடியில் ஓய்வு எடுத்து வருகிறது. அதன ஒவ்வொருவரும் பார்க்கின்றனர். மேலும் அந்த கூட்டணி 3 சக்கரம் போன்றது. ஒவ்வொரு சக்கரமும் எதிர் எதிர் திசையில் செல்லும். அந்த கூட்டணியில் பெரிய சித்தாந்த வேறுபாடுகள் உள்ளதால் அது மிகவும் நிலையற்ற அரசாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேவேந்திர பட்னாவிஸ்

இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நேற்று உத்தவ் தாக்கரே பேசுகையில், நான் இன்னும் இந்துத்துவா சித்தாந்தத்துடன்தான் உள்ளேன். எப்போதும் அதனை விட்டுக்கொடுக்க மாட்டேன். தேவேந்திர பட்னாவிஸிடமிருந்து நான் நிறைய கற்றுள்ளேன். அவருடன் நான் எப்போதும் நண்பராகதான் இருப்பேன். கடந்த 5 ஆண்டுகளில் நான் அரசுக்கு நம்பிக்கை துரோகம் செய்தது இல்லை. நான் தேவேந்திர பட்னாவிஸை எதிர்கட்சி தலைவர் என்று அழைக்க மாட்டேன். அவரை பொறுப்பான தலைவர் என்றுதான் அழைப்பேன். நீங்கள் எங்களுடன் நன்றாக இருந்ததிருந்தால், இந்த சம்பவங்கள் (பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி பிரிவு) நடந்து இருக்காது என தெரிவித்தார்.