“எப்புடி இருந்த நான்… இப்புடி ஆயிட்டேன்“ வைரலாகும் ஆர்.கே. சுரேஷின் பதிவு!

 

“எப்புடி இருந்த நான்… இப்புடி ஆயிட்டேன்“ வைரலாகும் ஆர்.கே. சுரேஷின் பதிவு!

மருது, நம்ம வீட்டு  பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். 

‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ். இதையடுத்து மருது, நம்ம வீட்டு  பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். 

ttn

இந்நிலையில் ஆர்.கே. சுரேஷ் 2018ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஜோசப் படத்தை தமிழில் பத்மகுமார் ரீமேக் செய்ய ஹீரோவாக ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார்.  இந்த படத்தை  இயக்குநர் பாலாவின்  பி ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.  இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதனால் தனது எடையை 22 கிலோ கூட்டியுள்ளார்.

இதற்கான புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ’73 கிலோ இருந்த நான் பாலா சார் படத்திற்காக 95 கிலோ ஆகிவிட்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.