எப்பா கவின் உனக்கு எத்தன காதல் தான் இருக்கும் பா….

 

எப்பா கவின் உனக்கு எத்தன காதல் தான் இருக்கும் பா….

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கிய நாள் முதல் காதல் என்ற ஒரு விஷயம் தான் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் சாக்ஷி வெளியேறிய பின்பு லாஸ்லிய- கவின் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் விஜய் தொலைக்காட்சியும் அவர்கள் இல்லாமல் ஒரு புரோமோ கூட வெளியிடுவதில்லை. 

இந்த நிலையில் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் கவின் தனது பழைய காதல் கதை குறித்து புதிய காதலி லாஸ்லியாவிடம் ஓப்பானாகக் கூறுகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத லாஸ்லியா, மிகவும் வருத்தத்துடன் இருப்பது போல் புரோமோ முடிந்துள்ளது. 

கவினின் பழைய காதல் தெரிந்த பிறகும் அவருடன் லாஸ்லியா காதலைத் தொடருவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.