எப்படியாவது விற்பனை செய்ய துடிக்கும் மத்திய அரசு……. ஏர் இந்தியாவை முழுமையாக வாங்க வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அனுமதி…….

 

எப்படியாவது விற்பனை செய்ய துடிக்கும் மத்திய அரசு……. ஏர் இந்தியாவை முழுமையாக வாங்க வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அனுமதி…….

ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாங்கி கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

விமானச் சேவையில் ஈடுபட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் ஆரம்ப காலத்தில் நல்ல லாபத்தில்தான் ஓடியது. இருந்தாலும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதனால் ஏர் இந்தியாவை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான நடவடிக்கையை சில ஆண்டுகளுக்கு முன் மேற்கொண்டது. அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

ஏர் இந்தியா

இதனையடுத்து, சமீபவத்தில் ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை விற்பனை செய்ய தயார் என மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஏா் இந்தியாவின் மொத்த கடனில் குறிப்பிட்ட சதவீதத்தை வாங்கும் நிறுவனம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தது. இதனையடுத்து டாடா குழுமம், அதானி குழுமம் உள்ளிட்டவை ஏர் இந்தியாவை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாங்கி கொள்ள நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கவுதம் அதானி

முதலில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் உரிமை 49 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது என இருந்தது. தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதலையடுத்து, கணிசமான உரிமை மற்றும் பயனுள்ள கட்டுப்பாடு விதிமுறையை மீறாமல் ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் வெளிநாடு வாழ் இந்தியர்களால் வாங்க முடியும். மத்திய அரசின் இந்த நடவடிக்கை வாயிலாக ஏர் இந்தியாவை ஏலம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, அந்நிறுவனத்துக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.