எப்படியாச்சும் மழை பெஞ்சிடனும் சாமி! கழுத்தளவு நீரில் நாதஸ்வரம் இசைத்த கலைஞர்கள்

 

எப்படியாச்சும் மழை பெஞ்சிடனும் சாமி! கழுத்தளவு நீரில் நாதஸ்வரம் இசைத்த கலைஞர்கள்

மழை வேண்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள குளத்தில் நாதஸ்வர கலைஞர்கள் அமிர்தவர்ஷினி ராகம் இசைத்தனர்

மழை வேண்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள குளத்தில் நாதஸ்வர கலைஞர்கள் அமிர்தவர்ஷினி ராகம் இசைத்தனர். 

சென்னையில், பருவ மழை பொய்த்ததால், மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். தற்போது, நீர் ஆதாரங்களில் உள்ள இருப்பை வைத்து, இன்னும் சில மாதங்கள் மட்டுமே, சென்னைக்கு குடிநீர் வழங்க முடியும் என, வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மழை வேண்டி, பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களில், யாகங்களும், சிறப்பு பிரார்த்தனைகளும், தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு தினமும் தாராபிஷேகம் நடந்து வருகிறது. நேற்று  கோவின் ஆஸ்தான நாதஸ்வர கலைஞர்கள், பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் இறங்கி அமிர்தவர்ஷினி ராகம் இசைத்து மழை வேண்டி பிரார்த்தனை நடத்தினர். அக்னி நட்சத்திரம் நாளையுடன் முடிவடைவதால் இன்று தோஷ நிவர்த்தி யாகமும் நடத்தப்பட்டது.