என் வீடியோவை ட்விட்டர் நீக்கியது ஏன் தெரியுமா? – ரஜினிகாந்த் விளக்கம்

என் வீடியோவை ட்விட்டர் நீக்கியது ஏன் தெரியுமா? – ரஜினிகாந்த் விளக்கம்

ரஜினிகாந்த் கொரோனா குறித்து பேசிய வெளியிட்ட வீடியோவில் உறுதிப்படுத்தப்படாத கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்கள் இருந்ததாக பலர் புகாரளித்தனர். பலர் புகாரின் அடிப்படையில் ட்விட்டர் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ரஜினிகாந்த் பேசிய அந்த வீடியோவை நேற்று நீக்கியது.

இந்நிலையில் இன்று ரஜினிகாந்த தனது ட்விட்டர் பக்கத்தில், “நேற்று பதிவு செய்த காணொளியில் 12 – 14 மணிநேரம் மக்கள் வெளியில் நடமாடாமல் இருந்தாலே கொரோனா வைரஸ் பரவுவது தடை பட்டு சூழல் மூன்றாம் நிலைக்கு செல்வது தவிர்க்கப்படலாம் என்று கூறியிருந்தால், அது “ இன்று மட்டும் அப்படி இருந்தாலே போதும்” என்று பரவலாகப் புரிந்து கொள்ளப்பட்டு அதிகம் பகிரப்பட்டது. இதனால் ட்விட்டர் நிர்வாகம் அதனை நீக்கியுள்ளது.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர அரசு பரிந்துரைக்கும் காலம் வரை இன்றைப் போலவே சுய தனிமைப்படுத்துதலை நாம் கவனமாகப் பின்பற்றி இந்த கொடிய வைரஸை வீழ்த்துவதற்கான முயற்சியில் கவனத்தை செலுத்துவோம். 

இவ்வேளையில் என்னுடைய காணொளியின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு ஆதரித்து மக்களிடம் பதிவை சரியான முறையில் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.