’என் மகள் நன்றாக இருக்கிறாள்’ ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்

 

’என் மகள் நன்றாக இருக்கிறாள்’ ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது உலகம்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 46 லட்சத்து  5 ஆயிரத்து 227 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 18 நாட்களுக்குள் 46 லட்சம் அதிகரித்து விட்டது.   

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 70 லட்சத்து 75 ஆயிரத்து 625 நபர்கள்.

’என் மகள் நன்றாக இருக்கிறாள்’ ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 8 லட்சத்து 34 ஆயிரத்து 771 பேர்.

நோய்த் தொற்று பரவாமல் தடுக்க ஒரே வழி, தடுப்பு மருந்துதான் என்ற நிலைக்கு வந்துவிட்டது உலகம். அடுத்த ஆண்டுதான் தடுப்பு மருந்து வரலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால், ரஷ்யா உலகின் முதல் கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்துவிட்டது. அதை ஆகஸ்ட் 12-ம் தேதி பதிவு செய்துவிட்டது.

’என் மகள் நன்றாக இருக்கிறாள்’ ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்

ஸ்புட்னிக் வி எனும் பெயரிட்டுள்ள அந்தத் தடுப்பு மருந்தின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும் என்பதை அறிந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அத்தடுப்பூசியை தன் மகளுக்கே போடச் செய்தார்.

தடுப்பூசி போடப்பட்டதால் ரஷ்ய அதிபர் மகள் இறந்துவிட்டார் என்று செய்தி பரவியது. ஆனால், அது வதந்தி என்று பல ஊடகங்களும் நிருபித்து எழுதின.

இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ரஷ்ய அதிபர் புடின் தன் மகள் குறித்து பேசியிருக்கிறார்.

’என் மகள் நன்றாக இருக்கிறாள்’ ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்

’தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முடிவு குறித்து உங்கள் மகளுக்கு அறிவுரை தந்தீர்களா? என்று கேட்டதற்கு, ’அவள் பெரிய பெண். அவளாகவே தான் இந்த முடிவை எடுத்தாள்’ என்று கூறியிருக்கிறார்.

மேலும் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து பற்றி கேட்டபோது, ‘ப்ரீ கிளிக்கல் டெஸ்ட்டில் விலங்குகளுக்கும் தன்னார்வலர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அது நல்ல எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. அது எந்தப் பாதிப்பும் இல்லாதது. என் மகள் தற்போது நன்றாக இருக்கிறாள்’ என்று கூறியிருக்கிறார்.