“என் மகளின் போட்டோவை கட்டிபிடித்துக்கொண்டேன்” : நிர்பயாவின் தாய் கண்ணீர் பேட்டி!

 

“என் மகளின் போட்டோவை கட்டிபிடித்துக்கொண்டேன்” : நிர்பயாவின் தாய் கண்ணீர் பேட்டி!

2013 செப்டம்பரில் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பை வழங்கியது.  

மருத்துவ மாணவி ஒருவர்  2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். அதன் பிறகு சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தைரியமான பெண் என பொருள்படும் வகையில் நிர்பயா என்றழைக்கப்பட்ட அவருக்கு நேர்ந்த துயரம் உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு கட்டங்களாக நடந்த விசாரணைக்குப்பின் டெல்லி கீழமை நீதிமன்றம் 2013 செப்டம்பரில் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பை வழங்கியது.  

ttn

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு, சீராய்வு மனு, குடியரசு தலைவரிடம் கருணைமனு என உயிர்வாழ பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த குற்றவாளிகளின் ஒட்டுமொத்த கதவுகளும் அடைக்கப்பட இறுதியில் இன்று அதிகாலை  டெல்லி திகார் சிறையில்  நால்வரும் தூக்கிலிடப்பட்டனர்.

tt

இந்நிலையில் இதுகுறித்து கூறியுள்ள நிர்பயாவின் தாய் ஆஷாதேவி, நிர்பயாவுக்கு இறுதியாக நியாயம் கிடைத்துள்ளது. என் மகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பெண்களுக்கும், தேசத்திற்கும் நீதி கிடைத்துள்ளது. நீதியை இந்த நாடு பெற்று தந்துள்ளது. இந்தியாவின் மகள்களுக்கான, அவர்களின் நீதிக்கான எங்கள் போராட்டத்தை நாங்கள் தொடருவோம். இந்த நீதிக்காக தான் நாங்கள் காத்துக்கிடந்தோம். அது எங்களுக்கு வேதனையை அளித்தாலும் தற்போது எங்களுக்கு உரிய நீதி கிடைத்து விட்டது. நான் என் மகளின் புகைப்படத்தைக் கட்டி தழுவிக்கொண்டேன்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.