என் போட்டோவ கிழிங்க உடைங்க என் ரசிகன் மேல கை வைக்காதீங்க – தளபதி விஜய்

 

என் போட்டோவ கிழிங்க உடைங்க என் ரசிகன் மேல கை வைக்காதீங்க – தளபதி விஜய்

என்னுடைய போட்டோவ உடைங்க, போஸ்டர கிளிங்க ஆனா என் ரசிகர்கள் மீது கை வைக்காதீங்க என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

என்னுடைய போட்டோவ உடைங்க, போஸ்டர கிளிங்க ஆனா என் ரசிகர்கள் மீது கை வைக்காதீங்க என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

வெறிதனம் பாடலுடன் தன்னுடைய பேச்சை தொடங்கினார் நடிகர் விஜய். பிகில் ஆடியோ விழாவில் பேசிய நடிகர் விஜய், “யோகிபாபு தன்னுடைய வீட்டின் கிரகபிரவேசத்திற்கு கூட போகவில்லை என்று கேள்விப்பட்டேன். தற்போது அவருக்கு பெண் பார்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.. பெண் பார்க்க சரியா போயிடுங்க யோகிபாபு. வாழ்க்கை கூட ஒரு கால்பந்தாட்ட விளையாட்டு போல்தான். நாம கோல்போட முயற்சிப்போம் ஆனால் அதை தடுக்க ஒரு கூட்டமே இருக்கும். நம்ம கூட இருக்குறவனே சேம் சைடு கோல் போடுவான். யாருடைய அடையாளத்தையும் எடுத்துக்காதீங்க. உங்களுக்குனு ஒரு அடையாளத்தை உருவாக்குங்க. எதிரியாக இருந்தாலும் நாகரிகமாக இருக்க வேண்டும். எவன எங்க உக்கார வைக்கனுமோ அவன் அங்க உக்கார வச்சிங்கனா எல்லம் சரியா இருக்கும்.

bigil

அரசியல்ல புகுந்து விளையாடுங்க, ஆனா விளையாட்டுல அரசியல கொண்டு வர்றாதீங்க. சுபஸ்ரீ விவகாரத்தில் கைது செய்யவேண்டியவர்களை கைது செய்யாமல், லாரி டிரைவர்களை கைது செய்கிறார்கள். வாழ்கைல அவங்க மாதிரி இவங்க மாதிரி வரணும்னு ஆசை படாதீங்க அதுக்கு தான் அவங்களே இருக்காங்களே.. நீங்க நீங்களா வாங்க” என்று கூறினார்.