‘என் பிறந்தநாளுக்கு கடவுள் கொடுத்த பரிசு இவன் தான்’ : வனிதா விஜயகுமாரின் தங்கை நெகிழ்ச்சி!

 

‘என் பிறந்தநாளுக்கு கடவுள் கொடுத்த பரிசு இவன் தான்’ : வனிதா விஜயகுமாரின் தங்கை நெகிழ்ச்சி!

பொண்ணு வீட்டுக்காரன், படையப்பா, சுயம்வரம், புன்னகை தேசம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.  

பிரபல திரையுலக ஜோடியான நடிகர் விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியின் மகள் ப்ரீத்தா விஜயகுமார்.  தமிழில் 1998 ஆம் ஆண்டு தர்மா என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் பொண்ணு வீட்டுக்காரன், படையப்பா, சுயம்வரம், புன்னகை தேசம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.  

ttn

இதையடுத்து  இயக்குநர்  ஹரியை 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். திருமணத்திற்குப்  பிறகு  சினிமாவிலிருந்து ஒதுங்கிய இவர் குடும்ப வாழ்க்கையில்  செட்டிலாகி விட்டார். 

இந்நிலையில் இன்று ப்ரீத்தா விஜயகுமார் தனது 39 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதோடு அவரது மகன் க்ரிஷும் அம்மாவோடு இணைந்து பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதுகுறித்து ப்ரீத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, எங்களுக்கு பிறந்தநாள்; எனது பிறந்தநாளில் கடவுள் கொடுத்த மிகச்சிறந்த பரிசு என் குழந்தை’ என்று குறிப்பிட்டு நெகிழ்ந்துள்ளார்.