என் பதவிய எவனும் நினைச்சுப் பார்க்கக்கூடாது… அதிமுகவில் அதிகார யுத்தம்..!

 

என் பதவிய எவனும் நினைச்சுப் பார்க்கக்கூடாது… அதிமுகவில் அதிகார யுத்தம்..!

அது எனக்கு மட்டும்தான். மற்றவர்கள் நினைச்சு கூட பார்க்கக் கூடாது என்று அதிரடியாக சொல்லிட்டாராம்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுகவில் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் லட்சுமணனுக்கு, எம்.பி பதவியும் வழங்கப்பட்டது. ஜெயலலிதா  மறைவுக்கு பின்னர் அவரை ஓரங்கட்டி வைத்துள்ளாராம் உள்ளூர் அமைச்சரான சி.வி.சண்முகம். கட்சி தலைமை மாநில அமைப்பு செயலாளர் பதவிகொடுத்து லட்சுமணனை அங்கீகரித்துள்ளதாம்.

 shanmugam

அமைச்சரின் சூழ்ச்சியால் கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பணிக்கு அனுப்பப்பட்ட அவர் தற்போது, மாவட்டம்தான் ரெண்டாக பிரிந்து, விழுப்புரம் மாவட்டத்தை கட்சி ரீதியாக இரண்டாக பிரிக்க வேண்டும். கடலூரை மூன்றாக பிரிச்சதை போல, விழுப்புரம் மாவட்டத்தை வடக்கு, தெற்காக பிரித்து மீண்டும் மாவட்ட செயலாளர் பதவி வழங்க வேண்டும் என கேட்கிறாராம்.

லட்சுமணனின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக கட்சி தொண்டர்களே ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் இடைத்தேர்தல் நாயகனான அமைச்சர் சி.வி.சண்முகம் அதெல்லாம் முடியாது. ஒரே போஸ்டிங். அது எனக்கு மட்டும்தான். மற்றவர்கள் நினைச்சு கூட பார்க்கக் கூடாது என்று அதிரடியாக சொல்லிட்டாராம். இடைத்தேர்தல் நாயகனின் பேச்சை கேட்ட மாநில தலைமை தற்போது அமைதி காத்து வருகிறதாம்.