என் நெஞ்சில் நெருப்பு எரிகிறது: பிரதமர் மோடி ஆவேசம்

 

என் நெஞ்சில் நெருப்பு எரிகிறது: பிரதமர் மோடி ஆவேசம்

உங்கள் நெஞ்சில் மட்டுமல்ல என் நெஞ்சிலும் நெருப்பு எரிகிறது என புல்வாமா தாக்குதல் குறித்து பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார்

பாட்னா: உங்கள் நெஞ்சில் மட்டுமல்ல என் நெஞ்சிலும் நெருப்பு எரிகிறது என புல்வாமா தாக்குதல் குறித்து பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது குறி வைத்து தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 44 பாதுகாப்புப் படை வீரர்களின் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை விரிவாக்கம் செய்யும் திட்டம் மற்றும் பாட்னா நகருக்கான புதிய மெட்ரோ ரெயில் சேவை திட்டம் உள்பட சுமார் ரூ.33,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிகார் மாநிலத்தில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

அப்போது பேசிய அவர், மிகமோசமான தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவுடன் தீவிரவாதிகள் அரங்கேற்றியுள்ளனர். புல்வாமா தாக்குதலால் உங்கள் நெஞ்சில் கொந்தளிக்கும் நெருப்பு என்னுடைய இதயத்திலும் எரிந்து கொண்டிருக்கிறது. தீவிரவாதிகளுக்கு சரியான பாடம் புகட்டப்படும் என்றார்.

ராணுவத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் தலைவிதி இனிமேல் ராணுவத்தால் தீர்மானிக்கப்படும் என ஏற்கனவே பிரதமர் மோடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.