என் நிழலை பார்த்து மம்தா நடுங்குறார்- பிரதமர் மோடி சாடல் 

என் நிழலை பார்த்து மம்தா நடுங்குறார்- பிரதமர் மோடி சாடல் 

பாஜகவுக்கு பெருகி வரும் ஆதரவை பார்த்தும், எனது நிழலை பார்த்தும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா நடுங்குகிறார் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். 

பாஜகவுக்கு பெருகி வரும் ஆதரவை பார்த்தும், எனது நிழலை பார்த்தும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா நடுங்குகிறார் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். 

பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்ற போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அவரை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து கொல்கத்தாவில் பேரணியில் ஈடுபட்டபோது பாஜக தொண்டர்களுக்கும், கொல்கத்தா மாணவர்களுக்கும் இடையே சண்டை மூண்டது. இதனால் வன்முறை வெடித்தது. 

இந்நிலையில் இன்று மேற்கு வங்க மாநிலம் பஷீர்ஹட்டில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய  பிரதமர் மோடி, “ பாஜக தான் மீண்டும் ஆட்சியமைக்கும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. எங்கு பாஜக ஆட்சிக்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மம்தா இருக்கிறார். சொல்லப்போனால் மம்தா என்னுடைய நிழலை பார்த்தே பயப்படுகிறார். யாராலும் பாஜகவின் வெற்றியை தடுக்க முடியாது என்பதை சூளுரைக்கிறேன்” எனப் பேசினார்.