“என் தகுதிக்கு உட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன்” : நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்!

 

“என் தகுதிக்கு உட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன்” : நடிகர் ரஜினிகாந்த்  ட்வீட்!

பல்வேறு தரப்பினர் விமர்சித்த நிலையில், இது தொடர்பாக இஸ்லாமிய அமைப்பினரைச் சந்தித்துப் பேச தயார் என ரஜினி அறிவித்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த ஷாகீன் பாக் போராட்டத்தைத் தொடர்ந்து, ஜாஃபராபாத், மாஜ்பூர் ஆகிய இடங்களிலும் போராட்டம் நடைபெற்று வந்தது. இதில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டது.  இதில் 45 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து கருத்து  தெரிவித்த ரஜினிகாந்த், டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு காரணம் மத்திய அரசின்  உளவுத்துறையின் தோல்வி. இதற்கு மத்திய அரசைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். டெல்லி வன்முறையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள், இல்லையென்றால் ராஜினாமா செய்யுங்கள்’ என்று கூறியிருந்தார். இதனை பல்வேறு தரப்பினர் விமர்சித்த நிலையில், இது தொடர்பாக இஸ்லாமிய அமைப்பினரைச் சந்தித்துப் பேச தயார் என ரஜினி அறிவித்தார்.

tt n

இதையடுத்து நேற்று தனது போயஸ் கார்டன்  இல்லத்தில் ரஜினி  உலமா சபை குருக்களை  சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசியதாக உலமா சபையின் தலைவர் காஜா மொய்னுதீன் பாகசி தெரிவித்தார். 

இந்நிலையில் இதுகுறித்து ரஜினி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நிர்வாகிகளைச் சந்தித்து அவர்கள் தரப்பு ஆலோசனைகளைக் கேட்டறிந்ததில்  மகிழ்ச்சி அடைகிறேன் எப்போதும் அன்பும் ஒற்றுமையும் அமைதியும் ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவர்களது கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்கு உட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.