என் டைட்டானிக்கை அவெஞ்சர்ஸ் மூழ்கடிச்சிடுச்சு: இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பதிவு

 

என் டைட்டானிக்கை அவெஞ்சர்ஸ் மூழ்கடிச்சிடுச்சு: இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பதிவு

டைட்டானிக் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் அவெஞ்சர்ஸ் டீமிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை: டைட்டானிக் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் அவெஞ்சர்ஸ் டீமிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மார்வெல் ஸ்டுடியோ நிறுவனம் கடந்த 2012-ம் ஆண்டு தி அவெஞ்சர்ஸ் படத்தை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து இப்படத்தின் நான்காம் பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். வெளியான நாளிலிருந்து தற்போது வரை அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. என்ன தான் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் படம் திருட்டுத்தனமாக வெளியானாலும், படத்தின் வசூலுக்கு மட்டும் பஞ்சமில்லை. 

avengers

இந்த நிலையில் உலகளவில் அதிக வசூல் பெற்ற படங்களின் வரிசையில் இரண்டாம் இடத்திலிருந்த டைட்டானிக் வசூலை முறியடித்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.

இந்நிலையில் டைட்டானிக் படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அவெஞ்சர்ஸ் படக்குழு வாழ்த்து கூறி  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில், ‘ஒரு ஐஸ்பெர்க் உண்மையான டைட்டானிக்கை மூழ்கடித்தது. தற்போது அவெஞ்சர்ஸ் திரைப்படம் எனது டைட்டானிக்கை மூழ்கடித்துள்ளது. எல்லோருமே உங்களது சிறப்பான பணிகளுக்கு வணக்கம் தெரிவிப்பார்கள். திரைத்துறைக்கு மிகப்பெரிய வெற்றியை காட்டிவிட்டீர்கள். இது அனைத்தையும் விட பெரியது’ என்று கூறியுள்ளார்.