என்.ஜி.கே படத்தின் ரகசியத்தை கண்டு பிடியுங்கள்: ரசிகர்களுக்கு டாஸ்க் கொடுத்த செல்வராகவன்!

 

என்.ஜி.கே படத்தின் ரகசியத்தை கண்டு பிடியுங்கள்: ரசிகர்களுக்கு டாஸ்க் கொடுத்த செல்வராகவன்!

இயக்குநர் செல்வராகவன் என்.ஜி.கே படம் குறித்து ரசிகர்களுக்கு ஒரு புதிய டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். 

சென்னை: இயக்குநர் செல்வராகவன் என்.ஜி.கே படம் குறித்து ரசிகர்களுக்கு ஒரு புதிய டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். 

முதல் முறையாக இயக்குநர் செல்வராகவன்-சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள என்.ஜி.கே திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகச் சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங்க் நடித்துள்ளனர். 

ஒரு வருடத்திற்கு பிறகு சூர்யா படம் வெளியானதால் கண்டிப்பாக இந்த படம் அவரது கரியரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பேசப்பட்டது. ஆனால் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் புரியவே இல்லை என்று விமர்சனம் செய்தனர். 

இந்த நிலையில் இந்த படத்தில் சில காட்சிகள் குறித்து சமூகவலைத்தளங்களில் விவாதம் செய்யப்பட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகத் தான் புரிந்துகொண்டதைப் பதிவு செய்து வருகின்றனர். தற்போது இதுகுறித்து இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்த படத்தை பற்றி விளாவரியாக அலசலாம் என்று முன்பு சொல்லியிருந்தேன். இதில் எப்பொழுது நந்த கோபாலன் குமரன், என்ஜிகேவா மாறுகிறான். உங்கள் பதிலை எனக்கு தெரியப்படுத்துங்கள். நான் அதில் ஒன்றை தேர்வு செய்து உங்களுக்குச் சொல்கிறேன் நாளை சொல்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.