என்.ஜி.கே படத்தின் ட்விஸ்டை உடைத்த செல்வராகவன்!

 

 என்.ஜி.கே படத்தின் ட்விஸ்டை உடைத்த செல்வராகவன்!

இயக்குநர் செல்வராகவன் என்.ஜி.கே படத்தின் ட்விஸ்டை ரசிகர்களுக்கு கூறியுள்ளார். 

சென்னை:  இயக்குநர் செல்வராகவன் என்.ஜி.கே படத்தின் ட்விஸ்டை ரசிகர்களுக்கு கூறியுள்ளார். 

முதல் முறையாக செல்வராகவன்- சூர்யா காம்போவில் சமீபத்தில் வெளியான படம் என்.ஜி.கே. சாய்பல்லவி, ரகுல் ப்ரீத் சிங்க் நடித்துள்ள இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும்  தோல்வியைத் தழுவியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும்  படம் புரியவே இல்லை என்று குற்றச்சாட்டு வைத்தனர். 

அதைத்தொடர்ந்து படத்தை பற்றி சமூகவலைத்தளங்களில் பெரும் விவாதம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இதுகுறித்து இயக்குநர் செல்வராகவன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இந்த படத்தில் சூர்யா எப்போது என்.ஜி.கேவாக மறுக்கிறேன். உங்களுடைய கருத்தை பதிவு செய்யுங்கள், சரியான விடையை நாளை அறிவிக்கிறேன்’ என்று பதிவிட்டிருந்தார். 

அதன்படி அந்த வெற்றியாளரை அவர் அறிவித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ‘நிறைய பேர் இந்த சீன் பற்றி யூகித்தீர்கள், ஆனால் இந்த பதிவு தான் மிகவும் சரியானது’ என்று பதிவிட்டுள்ளார்.