என்.ஜி.கே இண்டர்வெல் சீன் ரகசியத்தை உடைத்த இசையமைப்பாளர்!

 

என்.ஜி.கே இண்டர்வெல் சீன் ரகசியத்தை உடைத்த இசையமைப்பாளர்!

என்.ஜி.கே படத்தின் இண்டர்வல் சீன் பற்றிய ரகசியத்தை யுவன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் போட்டுடைத்துள்ளார்.

சென்னை: என்.ஜி.கே படத்தின் இண்டர்வெல் சீன் பற்றிய ரகசியத்தை யுவன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் போட்டுடைத்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘என்.ஜி.கே’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் ட்ரைலர், பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

surya

ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பரப்பில் உள்ள இந்த திரைப்படம் வரும் மே.31ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. 

yuvan

அதையொட்டி சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என பலரும் ட்விட்டர் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர். இதையடுத்து படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா சமீபத்தில் பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் பல சவராஸ்யமான கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது  என்.ஜி.கே படத்தில் உங்களக்கு மிகவும் பிடித்த காட்சி எது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘எனக்கு இதில் மிகவும் பிடித்தது என்றால் அது இண்டர்வெல் காட்சி தான். ஏனென்றால் அது சிங்கிள் ஷாட், ஒரே ஷாட்டில் நடிப்பது ரொம்ப கஷ்டம், ஆனால் அதனை அசால்ட்டாக சூர்யா நடித்துள்ளார். அந்த காட்சி ரொம்ப அழகாக வந்துள்ளது’ என்று கூறியுள்ளார்.