என் குடும்பத்தையும், நண்பர்களையும் பற்றி தப்பா பேச யாருக்கும் உரிமையில்லை – சித்தார்த்!

 

என் குடும்பத்தையும், நண்பர்களையும் பற்றி தப்பா பேச யாருக்கும் உரிமையில்லை – சித்தார்த்!

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து பல்வேறு மாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து பல்வேறு மாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு  நடிகர் சித்தார்த், இசை கலைஞர் டி.எம் கிருஷ்ணா உள்ளிட்டோர் நேரில் சென்று தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சித்தார்த் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த செயலுக்காக பாஜகவினர் சித்தார்த் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தனர். 

 

 

இந்தநிலையில் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாஜகவினர் முட்டாள்கள், மற்றவர்கள் எதை சாப்பிட வேண்டும்? எதை குடிக்க வேண்டும்? பெண்கள் எப்படி ஆடை அணிய வேண்டும்? என்று பாடம் நடத்துகிறார்கள். என் குடும்பத்தையும், நண்பர்களையும் பற்றி தவறாக பேச யாருக்கும் உரிமையில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.