என் கற்பை சூறையாடிவிட்டார் லீனா: இயக்குநர் சுசி கணேசன் விளக்கம்

 

என் கற்பை சூறையாடிவிட்டார் லீனா: இயக்குநர் சுசி கணேசன் விளக்கம்

பெண் இயக்குநர் லீனா மணிமேகலை தனது கற்பை சூறையாடிவிட்டதாக ’திருட்டுப்பயலே’ இயக்குநர் சுசி கணேசன் தெரிவித்துள்ளார்.

சென்னை: பெண் இயக்குநர் லீனா மணிமேகலை தனது கற்பை சூறையாடிவிட்டதாக ’திருட்டுப்பயலே’ இயக்குநர் சுசி கணேசன் தெரிவித்துள்ளார்.

மீ டூ இயக்கத்தின் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வர தொடங்கியுள்ளது. ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த மீ டூ விவகாரத்தில் ஏராளமான பிரபலங்கள் பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்து, நடிகர் ராதாரவி, பாடகர் கார்த்திக் உள்ளிட்டோரை தொடந்து, இந்த மீ டூ சர்ச்சையில் பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் சுசி கணேசனின் பெயரும் சிக்கியது. இந்நிலையில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள பொய்யான புகார் குறித்து இயக்குநர் சுசி கணேசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், லீலா மணிமேகலை என்னிடம் கேட்ட உதவிகள் இரண்டு. உதவி இயக்குநர்/பாடலாசிரியர், அதை என்னால் செய்ய முடியவில்லை. க்கு நான் உதவி செய்யாததால், இதுபோன்ற அருவருப்பான குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்தியுள்ளார். மீ டூ-வை தனது சொந்த பழிவாங்கலுக்காக பயன்படுத்தியுள்ளார். இவர்களை போன்ற சில சுயநலவாதிகள் மீ டூ இயக்கத்தை திசைத்திருப்ப முயற்சிக்கின்றனர்.

பொய் குற்றச்சாட்டு கூறியதற்கு லீனா மணிமேகலை தனது பதிவிலேயே மன்னிப்புக் கேட்ட வேண்டும். கற்பு என்பது இருபாலருக்கும் உரித்தான ஒன்று. இந்த அவதூறு குற்றச்சாட்டின் மூலம் எனது கற்பை லீனா மணிமேகலை சூறையாடிவிட்டார். எனது குடும்பம் வேதனையில் வடிக்கும் கண்ணீரை நீதிமன்றம் சென்று கழுவும் வரை எந்த பக்கமு சாயாமல் காத்திருங்கள் என்று தெரிவித்துள்ளார்.