‘என் கருத்து உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தினால் அது என் தவறு அல்ல’ : மீண்டும் சர்ச்சையில் சிக்கும் பா. ரஞ்சித்

 

‘என் கருத்து  உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தினால் அது என் தவறு அல்ல’ : மீண்டும் சர்ச்சையில் சிக்கும் பா. ரஞ்சித்

நான் கூறிய கருத்தும் பேச்சும் மற்றவர்களை கோபப்படுத்தியிருந்தால் அது எதிர்ப்பவர்களின்  தவறு, என் தவறு இல்லை என்றார்.

ராஜராஜ சோழன் குறித்த தம் பேச்சு பிறரை கோபப்படுத்தி இருந்தால், தவறு எதிர்ப்பவர்களிடம் தான் உள்ளது, தம்மீது இல்லை என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

rajaraja

தஞ்சை மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் பா.ரஞ்சித்,  மக்களிடம் உள்ள நிலத்தை அபகரித்தவர் மன்னர் ராஜராஜசோழன். அவரது ஆட்சியிலிருந்துதான்  ஜாதி பிழவு, தேவதாசி முறை ஆகியவை கொண்டுவரப்பட்டது. தற்போது ராஜராஜ சோழன் எங்கள்  ஜாதிக்காரர் என்று 8 ஜாதிக்காரர்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அவருடைய ஆட்சிதான் இருப்பதிலேயே  இருண்ட ஆட்சி என்று நான் சொல்வேன்’ என்று ஆவேசமாகப் பேசியிருந்தார். ரஞ்சித்தின் இந்த பேச்சை சர்ச்சையானது. இதனால் வழக்குகளைச் சந்தித்த ரஞ்சித் தற்போது முன்ஜாமீன் பெற்றுள்ளார். 

ranjith

இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், ராஜராஜ சோழன் குறித்து நான் பேசியதை  எந்த இடத்திலும் மறுக்கவில்லை. அவர் உயிருடன் இருந்திருந்தால் அவர்மீதான விமர்சனம் குறித்து என்னுடன் உரையாடி இருப்பார். குறிப்பிட்ட சிலரிடம் நிலம் உள்ளது எங்களிடம் ஏன்  இல்லை என்பதை குறித்து நான் ஆராய்ந்து வருகிறேன். நான் கூறிய கருத்தும் பேச்சும் மற்றவர்களை கோபப்படுத்தியிருந்தால் அது எதிர்ப்பவர்களின்  தவறு, என் தவறு இல்லை என்றார்.

உலகம் போற்றும் மாமன்னரைப் பற்றிப் பேசும் போது  சிந்தித்துப் பேசவேண்டும் என்று அறிவுரை  வழங்கி நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ள நிலையில் பா. ரஞ்சித்தின் இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.